Posts

Showing posts from September, 2024

மகத்: இன்று - அன்றாடம் அரங்கேறும் யாத்திரை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -30. நாள்: 30.09.2024. நூல்: மகத்: இன்று- அன்றாடம் அரங்கேறும் யாத்திரை அறிமுகம்: வெ.இராஜன்  வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம்.  விலை 65 ரூபாய். பிறப்பின் அடிப்படையில் உயர்வு,  தாழ்வு ,தொழில், கல்வி ,சமூக உயர்வு, இழிவு இருப்பிடம் ஆகியவற்றை முழுமையாக நிர்ணயித்து அதன் மூலம் ஒரு மனிதன் தன் பிறப்பிலிருந்து, இறப்பு வரை தான் எந்த வகையிலும் சம்பந்தப்படாத ஒன்றினை சுமக்க வேண்டிய அல்லது அனுபவிக்க வேண்டிய வழிமுறைகளை உருவாக்கியது என்பது உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாத  மிக மோசமான விஷம் போன்ற ஒரு தத்துவம். சாதிய சமுதாயத்தை இந்தியா உருவாக்கி உருப்பெற்று, ஆலமரமாக நிறுத்தியது. இதனைப் பல்வேறு தலைவர்கள், இயக்கங்கள் , கட்சிகள் ,அரசுகள் ஆகியவை தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து  சமத்துவ சமூகத்தை, அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அமைந்த ஒரு உயரிய சமூகத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சியின்  பிதாமகர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் மகத் நகர் குளத்தில் தண்ணீர் எடுக்க...

பாலைவனப் பூ - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்: 29 நாள்: 29.09.2024. நூல் : பாலைவனப் பூ ஆங்கிலத்தில் வாரிஸ் டைரி காத்திலின் மில்லர் தமிழில்:  எஸ் .ஆர்ஷியா நூல் அறிமுகம்: மா.பூங்குன்றன்   இந்நூல்  ஆப்பிரிக்காவின் 27 நாடுகளில் வாழும் முஸ்லிம் பழங்குடிகளிடையே,  குறிப்பாக பெண்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் மிக மோசமான மூடநம்பிக்கை ஒன்றைப் பற்றியது.  ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலிய பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடியின நாடோடியான வாரீஸ் என்ற பெண்ணுக்கு ஐந்து வயதில்  மதத்தின் பெயரால் நடைபெற்ற ஒரு சடங்கு, அப் பெண்ணின் முழு வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. அந்த ஒரு பெண் மட்டுமல்ல,  ஆப்பிரிக்கக் கண்டத்தின் 28 நாடுகளிலுள்ள 13 கோடிப் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள தாக ஐ.நா -வின் சுகாதாரத்துறை மதிப்பிட்டுள்ளது. சோமாலிய நாட்டைச் சேர்ந்த பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் ஒரு பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர் வாரிஸ். அவளுடைய ஐந்தாவது வயதில் அவளது பெற்றோர்  ஒரு பழங்குடியினக் கிழவியை அழைத்து வருகின்றனர். அக் கிழவி அந்த ஐந்து வயதுக் குழந்தை வாரிஸுக்கு பழங்க...

வித்தியாசம்தான் அழகு - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை  - நூல் அறிமுகம் - 28 நாள்: 28.09.2024.      நூல்: வித்தியாசம்தான் அழகு- குழந்தைகளுக் கான கதைகளும்            பெரியவர்களுக் கான நீதிகளும் ஆசிரியர்: ச . மாடசாமி நூல் அறிமுகம்:  மொ. பாண்டியராஜன பதிப்பகம் : புக் ஃபார் சில்ரன் விலை: 110 பேரா. ச. மாடசாமி அவர்களை தமிழக கல்வித் தளத்தில் இயங்குகிறவர் களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. காரணம் எனக்குத் தெரிந்து 1990 முதல் இன்று வரை குழந்தைகள் மற்றும் மக்களுக்கான கல்வியை கடைநிலையில் உள்ள மக்களுக்கு எப்படியாவது  சென்று சேர்த்துவிட வேண்டும் என்று துடிக்கின்ற இதயம் அவருடையது. எப்போதும் யாரிடமாவது எது குறித்துப் பேசினாலும் அதில் கல்வி வந்துவிடும்.  அவர் பெரிதும் எழுதிய நூல்கள் கல்வி சார்ந்தவையாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து பாம்பாட்டிச் சித்தர் என்ற புத்தகமும், ஒரு அரசியல் புத்தகமும் (பெயர் தெரியவில்லை) தவிர மற்றவை அனைத்தும் கல்வி சார்ந்தவையாகவே இருக்கும். இவருடைய படைப்புகள் அனைத்தும் ஆசிரியர்களுக்கு பெரிய வழிகாட்டியாக இருக்கும். குறிப்பாக இள...

தருமபுரி மண்ணும் மக்களும் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -27 நாள்: 27.09.24. நூல்: தருமபுரி மண்ணும் மக்களும் ஆசிரியர்: த.பழமலய் நூல் அறிமுகம்: பாவண்ணன் வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம் விலை: ரூ400  பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து  அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார்.  ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன.  ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்...

உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -26. நாள்: 26.09.2024. நூலின் பெயர்:  உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் ஆசிரியர்  : எடி ஜேக்கூ தமிழில்: நாகலட்சுமி சண்முகம் நூல் அறிமுகம்:  சிவம் முனுசாமி பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிகேஷன். மொத்த பக்கங்கள் 206, விலை : ரூ.299/- நூலாசிரியர் பற்றி: ஆபிரகாம் சாலமன் ஜேக்கூபோவிச்  என்ற இயற்பெயர் கொண்ட  எடி ஜேக்கூ ஒரு ஜெர்மானிய யூதர். நாஜிப் படைகளின் வதை முகாம்களில் சிக்கி உயிர் பிழைத்தவர்.   1945 ஆம் ஆண்டில் வதை முகாம் கைதிகள் கொடூரமாக மைல் கணக்கில் நடத்தி அழைத்துச் செல்லப்பட்ட மரணப் பேரணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். தனது 100 - ஆவது வயதில் வெளியிடப்பட்ட இந்த நூல்  இவருடைய சுயசரிதை நூல்.  மொழிப்பெயர்ப்பாளர் பற்றி:  நாகலட்சுமி சண்முகம்.  இல்லத்தரசியான இவர் 10 ஆண்டுகளில் சுமார் 100 புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர் ஒரு தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட.  இவரது கணவரும்  புத்தக மொழிபெயர்ப்பாளர். இவர்கள் மும்பையில் வசிக்கிறார்.  நாகலட்சுமி தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கா...

குடைக்காவல் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -25  நாள்: 25. 9 .24 நூலின் பெயர்: குடைக்காவல்  நூலாசிரியர்: வ.அதியமான் நூல் அறிமுகம்: எழுத்தாளர்  பாவண்ணன் ( Book day.Com) விலை : ரூ130- “குடைக்காவல்” (KudaiKaval) தொகுதியைப் பிரித்து முதல் கவிதையைப் படித்ததுமே, இது எனக்கான கவிதை என்றும் இவர் எனக்கான கவிஞர் என்றும் என் மனம் உணர்ந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி, கவிதையைப் படித்தபோது, என்னிடம் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காக யாரோ ஒருவர் எனக்கு எதிரில் உட்கார்ந்து உரையாடுவதுபோல உணர்ந்தேன். இதற்குமுன் ஆனந்தகுமார், மதார், பொன்முகலி போன்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தபோது எழுந்த அதே எண்ணத்தை அதியமானின் கவிதைகளும் அளித்தன. அல்பட்ரோஸ் என்றொரு பறவையைப்பற்றி சமீபத்தில் படித்தேன். உலகிலேயே மிக நீளமான இறக்கைகளைக் கொண்ட பறவை அது. அந்த இறக்கைகளின் எடையின் காரணமாக அது பிற பறவைகளைப்போல தன்னிச்சையாக எம்பிப் பறக்கமுடிவதில்லை. எம்பிப் பறக்க அதற்கு உயரமானதொரு மலைமுகடு தேவைப்படுகிறது. அந்த உச்சிப்புள்ளி வரைக்கும் உடலின் எடையைத் தாங்கியபடி நடந்து செல்கிறது. உச்சிப்புள்ளியிலிருந்து இறக்...

எனது இந்தியா - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -24 நாள்: 24.09.24 நூலின் பெயர்: எனது இந்தியா  எழுதியவர்: எஸ். ராமகிருஷ்ணன் * நூல் அறிமுகம்: நாகா  ( நூல் வழிச்சாலை) இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டன. மிகச்சிறப்பான முறையில் இந்த கொண்டாட்டத்தை இந்த வருடம் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.  சுதந்திர இந்தியாவில் பிறந்த, மற்றும் இன்றைய இளைஞர் பெருமக்களுக்கு இந்திய தேசத்தின் பல பெருமைகள் முழுவதுமாக தெரியுமா என்றால் சந்தேகமே!? இளைஞர்களுக்கு தேசத்தின் மீது மிகுந்த பற்று உள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால், நம் இந்திய தேசம் எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பது குறித்த புரிதலும் தேவை. அதுகுறித்த வரலாற்றை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். மிக மிக முக்கியம்.  அதற்கு பெரிதும் துணை நிற்பது எனது இந்தியா  என்ற இந்நூல்! எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன். இவர் எழுதிய இன்னொரு நூல் மறைக்கப்பட்ட இந்தியா வை சில வாரங்களுக்கு முன் வாசித்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்தியா ஒரு காலத்தில் ஜாதிய ஒடுக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், மதச்சண்டை ஆகியவற்றால் பிளவுபட்...

வெல்லுவதோ இளமை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் - 23.   நாள்: 23.09.24 நூல்: வெல்லுவதோ இளமை. நூலாசிரியர் : என். சொக்கன் நூல் அறிமுகம் : மா . கல்பனாபழனி வெளியீடு: இந்து தமிழ்திசை பக்கம் : 112,  விலை: ரூ. 130/- இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான "இளமை புதுமை"யில் 25 வாரங்கள் வெளிவந்த ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளரின் இளமைக்கால கதையையும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை, சவால்கள் உள்ளிட்டவைகள் பற்றியும் அவர்கள் அதை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொண்டு முன்னேறினார்கள் என்பது பற்றி 25 ஆளுமைகளின் அனுபவங்களை பேசுகின்ற அற்புதமான நூல் வெல்லுவதோ இளமை என்ற நூல். இன்றைக்கு மிகப்பெரிய சாதனையாளர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டார்கள் என்பதை அறியும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு விதமான துன்பங்கள், சிக்கல்கள் நம்முடைய எதிர்காலத்திற்கு படிப்பினைகளாக அமைகிறது என்பதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து எவ்வாறு விடுபட்டு வெற்றிகரமாக முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பதை சிந்தித்தவர்களால் மட்டுமே இன்று ...

தொல்லியல் நோக்கில் குருமன்ஸ் பழங்குடி - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -22 நாள்: 22.09.24  நூல்: தொல்லியல் நோக்கில் குருமன்ஸ் பழங்குடி  நூலாசிரியர்: முனைவர் தி.சுப்பிரமணியன் நூல் அறிமுகம்: ம.சிங்காரவேல் ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் என பாட்டி சொன்ன கதையை நாம் நேரில் பார்க்கும் வாய்ப்பு  நிஜமானால் எப்படி இருக்கும் என யோசித்தால்...  நிஜத்தை பார்க்க இந்த அருமையான  புத்தகத்தை வாசிக்கலாம்.  தருமபுரி மாவட்டம் இந்திய வரலாற்றில் 4000 ஆண்டுகளாக நின்று நிலைப்பெற்று வருவது மட்டுமல்லாமல்,  தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நடுகல் வழிபாடு இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஒரு கேள்வி?  நாம் ஏன் நம்முடைய மூதாதையர்களை திருவிழா மற்றும் முக்கியமான நாட்களில் அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுகிறோம்? குலதெய்வம் எப்படி வந்தது? நமக்கென குலதெய்வம் ஏன் இருக்கின்றது?  நாம் ஏன் கிராமங்களில் திருவிழாக்களை கொண்டாடுகிறோம்? அதன் பண்பாடு இன்றளவும் என் தொடர்கிறது?  இனக்குழு சமுதாயம் எப்படி இம்மண்ணில் இன்னும் உயிர்ப்புடன் தங்களின் பண்பாட்டுக் கூறுகளை ...

மேடை வசப்படும் - நூல் அறிமுகம்.

Image
நூல் பெயர்: மேடை வசப்படும் நூல் ஆசிரியர் - திரு.க.சிவகுருநாதன் , நூல் பதிப்பகம் - வாலி பதிப்பகம்,  பக்கம்: 116,  விலை: ரூ.150. நூல் அறிமுகம்: பொறிஞர்.ப.நரசிம்மன், தருமபுரி, கைபேசி : 9443771590. நாள்: 21.9.2024. மேடையில் நிற்பதற்கு, மன உறுதி வேண்டும். அதுவும், பெருந்திரளாக கூடியிருக்கும் மேடையில் பேச, நாவண்மையுடன், சொல்வண்மை வேண்டும். நடுக்கமில்லா நிலையில் இருக்க வேண்டும். பேச வந்ததை நினைவில் வைக்க மேலும், நினைவில் உள்ளதை நேரில் பேசிட வேண்டும். நேரில் பேசுவதை நிறைந்திருப்போர் நினைவலையில் கலந்திடச் செய்ய வேண்டும். ‘மேடை வசப்படும்” என்ற நூலின் ஆசிரியர் திரு.க.சிவகுருநாதன் அவர்கள் திருச்சிராப்பள்ளி நகைச்சுவை மன்றத்தின் ஆணிவேராகத் திகழ்பவர் மற்றும் தமிழ்கூறும் நல்லோர்களால் நன்கு அறியப்பட்டவர். தனது மேடை அனுபவங்களின் அடிப்படையில், பொதுவான மேடைக் கோட்பாடுகளின் விளக்கங்களை கையடக்க நூலில், கடலளவு சாரத்தை கையில் எடுத்து கொடுத்துள்ளார்.  நூலைப் படிக்க எடுப்பவர், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி, அடுத்தடுத்த பக்கங்களுக்கு அழைத்துச் செல்வது அற்புதமான அனுபவமாக உள்...

தோணி (சிறுகதைகள்) - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் - 20. நாள்: 20.09.2024 நூல் : தோணி (சிறுகதைகள்) நூலாசிரியர் : பொறி. சிவசக்திவேல் நூல் அறிமுகம் : தமிழ்மகன் ப.இளங்கோ , ஆசிரியர். வெளியீடு : கவித்தேடல் பதிப்பகம் பக்கங்கள் : 265 விலை : உரூபாய் 180 /-            தோணி என்ற இந்த நூல் 9 சிறுகதைகளைக் கொண்ட ஒரு நூலாகும். நூலாசிரியர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கதையிலும் கதைக் களமானது வெவ்வேறாக இருப்பதால் அவர்கள் வாழ்கின்ற வட்டார மொழிகளை மிக நேர்த்தியாகக் கையாண்டு இருக்கிறார். அதே போல வட்டார வழக்கு மொழிகளையும் அவ்வப்போது இணைத்துக் கொண்டாலும் பொது மொழியிலேயே கதைப் போக்கினைக் கொண்டு போகிறார். இது நூலினை வாசிப்போருக்கு எளிதாகவும், சலிப்பின்றியும் இருக்கின்ற ஒரு எழுத்து நடையாக அமைந்துள்ளமை சிறப்பாகும்.             தோணி எனும் கதையிலே பிச்சமுத்து அங்கம்மாள் என்ற தம்பதியினரின் எளிய வாழ்க்கையை, அவர்களது உயரிய அன்பை, ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஈடில்லா அக்கறையை சிறப்பாக எடுத்துச் சொல்கிறார். தனது மனைவி தங்கம்மாள் சொல்வதை ஒரு வார்த்தையும் தட்டாத அன்பு ...

ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்-19 நாள்:19.09.24 நூல் : ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம் நூலாசிரியர் : சி.மகேந்திரன் நூல் அறிமுகம்:  கூத்தப்பாடி மா. பழனி வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கம் : 440, விலை : ரூ.500/- வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்ற இந்த நூல் ஜூனியர் விகடனில் 25 இதழ்களில் புகழ்பெற்ற ஓவியர் மருது வரைந்த வண்ணப் படங்களோடு தொடராக வெளிவந்ததை விகடன் பிரசுரம் நூலாக அச்சிட்டு முதல் பதிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இரண்டாம் பதிப்பாக டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் 2019ல் வெளிவந்திருக்கிறது. இந்த  புத்தகத்தில் 74  தலைப்பிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரை நீரின் மரணம் எனத் தொடங்குகிறது. நம் முன்னோர்களின் சமாதி மீது படர்ந்துள்ள ஈரம் கூட இரக்கமற்ற மனிதர்களின் காலடிகள் படிவதால் உலர்ந்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஈரத்தில் நனைந்து மகிழ்ந்த கால்கள் இன்று சுடு மணலில் வெந்து போனதில் மனம் காயப்பட்டு கிடக்கிறது. நதியை இழந்தவனின் துயரம் விவரிக்க இயலாதது. என்பது போன்ற வரிகளால் மனிதர்களால் இயற்கையான நீர் நிலைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக...

என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்-18  நாள் : 18.09.24 நூல் : என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? நூலாசிரியர் : முதுமுனைவர் இறையன்பு. நூல் அறிமுகம்: தகடூர். ப. அறிவொளி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்   பக்கங்கள் : 818. விலை உரூபாய்.1000/ *************** மனிதன் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருக்கலாம்.  அவை அனைத்திற்கும் அடிப்படையான கண்டுபிடிப்பு மொழி.  இன்னும் சொல்லப்போனால் எல்லா கண்டுபிடிப்புகளை விடவும் முதன்மையான கண்டுபிடிப்பும், முக்கியமான கண்டுபிடிப்பும் மொழியே.  மொழியின் வழியாகவே அறிவும் சிந்தனையும் அனுபவங்களும் காலந்தோறும் கடத்தி வரப்படுகிறது. இந்த உலகத்தின் தலைமைப் பொறுப்புக்கு மனிதன் வருவதற்கு காரணம் அவனுடைய கண்டுபிடிப்பான மொழியே. நமக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவு செய்யவும், மற்றவருடைய எண்ணங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவுகின்ற மாபெரும் சாதனம் மொழி.  ஒருவனை வாழ்விக்கவும் தாழ்விக்கவும் வல்லமை படைத்தது மொழியே. அந்த மொழியின் வழியான பேச்சினை எப்படிப் பேசுவது? எங்கே- யாரிடத்தில் எவ்வாறு பேசுவது? என்பதை ப...

நான் பயணித்த தமிழகம் - நூல் அறிமுகம்

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்-16 நாள்: 16.09.24  நூல்: நான் பயணித்த தமிழகம் நூல் ஆசிரியர்: சுரேஷ் வெங்கடாத்ரி நூல் அறிமுகம்: இ. தங்கமணி பவித்ரா பதிப்பகம், பக்கம் 242 . விலை 250.  8778924880.  நான் பயண விரும்பி. பயண இலக்கியங்களையும் விரும்பி வாசிப்பவன். அதனால் இந்நூலாசிரியரைப் பற்றிய எந்த அறிமுகமும்,எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் நூலை வாசித்தேன். மிக சுவையான நூல். பயண கட்டுரைகள் பொதுவாக புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள், வரலாற்று இடங்களை பற்றியதாகவே இருக்கும். ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது. தணிக்கை துறையில் பணியாற்றும் சுரேஷ்க்கு பணி நிமித்தம் தொடர்ந்து தமிழகம் முழுதும் பயணித்து ஓரிரு நாட்கள் தங்கி பணியாற்ற வேண்டிய சூழல். ஒரு வகையில் வேலையே ஊர் சுற்றுவதுதான்.  கொடுத்து வைத்தவர். பயணம் தொடர்பாக அவர் அன்றாடம் எழுதிய சிறு குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து அதில் மாவட்ட வாரியாக மிகச் சிறிய ஊர்களையும் பதிவு செய்துள்ளார். பல ஊர் பெயர்களை முதல் முறையாக கேள்விப்படுகிறோம். ஒரு ஊருக்கு சென்றால் அவ்வூரைப் பற்றிய பொதுவான சித்திர...

தமிழ் இனிது - நூல் அறிமுகம்.

Image
 தகடூர் புத்தகப் பேரவை -  நூல் அறிமுகம்- 15  நாள்: 15 .9 .24  நூல்: தமிழ் இனிது  நூலாசிரியர் :  நா. முத்து நிலவன்  நூல் அறிமுகம்:   செ.தமிழ் ராஜ்  (செம்மலர் மாத இதழ்)  வெளியீடு: தி இந்து தமிழ் திசை விலை: ரூ 160.    நமது தாய்மொழி தமிழை உயர்த்தனிச் செம்மொழி என்கிறோம். மரபார்ந்த தமிழ் மொழியில் வளமார்ந்த இலக்கண இலக்கிய நூல்கள் ஏராளம் இருப்பினும் எளிய முறையில் கற்றுக்கொள்ள ஓர் இலக்கணம் சார்ந்த நூல் இல்லை என்ற குறை இந்நூலால் தீர்ந்தது என்று நம்பிக்கையோடு சொல்லலாம்.       நவீன உலகம் தமிழை மெல்ல அல்ல விரைவாகவே கை கழுவிக் கொண்டிருக்கையில் எழுதவோ பேசவோ திண்டாட்டமாய் இருக்கையில் இலக்கணத்திற்கு என்ன இடம் இருக்கப் போகின்றது? கல்வியறிவற்ற ஒரு கிராமத்து பெண் தன்னுடைய உரையாடலில் 60 விழுக்காடு ஆங்கில சொற்கள் கலந்து பேசுகிறார் என்பது ஒரு புள்ளியியல் தகவல். உயர்கல்வி கற்றவர் கூட பிழையின்றி எழுதவும் வாசிக்கவும் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலமான தமிழ்ச் சூழலில் தமிழ் மொழியின் இலக்கண விளக்கேந்தி எளிய முறையில் சரியாக சொல்லிக் க...