Posts

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

Image
உணவு சுற்றுலா நூலின் தலைப்பு: உணவு சுற்றுலா  ஆசிரியர்: மருத்துவர் வி. விக்ரம் குமார்  வெளியீடு: இந்து தமிழ் திசை  விலை: ₹200 "உணவுப் பொருளைத் திருத்தத் தெரிந்தால் உடலைப் பேணத் தெரியும்" என்பது பாவேந்தரின் வாக்கு. உணவு என்பது வெறும் நாவிற்கான சுவை மட்டுமல்ல; அது ஒரு நிலத்தின் பண்பாடு, வரலாறு மற்றும் தட்பவெப்பநிலையோடு பின்னிப் பிணைந்த ஓர் அறிவியல். அந்த உயரிய வாழ்வியல் மெய்யியலை, ஒரு மருத்துவரின் நுட்பமான தேடலோடும், ஒரு பயணியின் ரசனையோடும் பதிவு செய்துள்ளார் மருத்துவர் வி. விக்ரம் குமார். 'இந்து தமிழ் திசை' வெளியீடாக வந்துள்ள இந்நூல், நம் மண்ணின் மறைந்து வரும் சுவைகளை மீட்டெடுக்கும் ஒரு அரிய ஆவணப் பதிவாகும். ஒவ்வொரு நிலப்பரப்பிலும் விளையும் பொருட்களுக்கு என்று ஒரு தனித்துவமான குணமுண்டு. எந்தக் காலத்தில் எதை உண்ண வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டும் என்ற தெளிவான பகுத்தறிவோடு உணவைக் கையாளுவதே 'உணவுத் திருத்தம்' ஆகும். பொதுவாக, ருசியான பண்டங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல என்ற ஒரு பொதுப் பிம்பம் உண்டு. ஆனால், ஒரு மருத்துவராகத் தான் கண்டடைந்த உண்மைகளின்...

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

Image
Smoke and Ashes Amitav Ghosh நூலனுபவம்: எனக்குத் தேநீர் அவ்வளவாகப் பிடிக்காது. சிறுவயதில் காப்பி குடித்து வளர்ந்தவன். இன்று யோசித்துப் பார்க்கையில், அதுவுமே, ஒரு அபத்தமான வழக்கமாகத்தான் தோன்றுகிறது. ஆனாலும், அது காலையில் தவிர்க்க முடியாத வழக்கமாக உள்ளது என்பது உண்மை. உலகின் பெரும்பான்மையான மக்களும், பெரும்பான்மை இந்தியர்களும் குடிப்பது தேநீர்தான். ஆனால், இந்த பயிர், இன்னொரு பயிருடன் இணைந்து, உலகை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதை அமிதாவ் கோஷ் சொல்கையில். ‘என்னைய்யா கத விடறார்’, னு தோன்றும். ஆனால், அதுதான் உண்மை என்கிறது அமிதாவ் கோஷின், ’Smoke and Ashes’, புத்தகம். அமிதாவ் கோஷ் உலக இலக்கியத்தில் மிக முக்கியமான ஆளுமை. இந்தியாவில், இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான, ‘ஞானபீட’, பரிசைப் பெற்றவர். இவரது Ibis Trilogy என அழைக்கப்படும், ‘Sea of Poppies’, ‘River of Smoke’ and ‘Flood of Fire’, என்னும் புகழ் பெற்ற நாவல் வரிசையை எழுதியவர். இந்த நாவல்களுக்காக அவர் செய்த ஆய்வுகளை, ஒரு வரலாற்றுக் குறிப்பாக ‘Smoke and Ashes’, என்னும்  இந்தப் புத்தகத்த...

நேர்மை படும் பாடு - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்  நூல் தலைப்பு: நேர்மை படும் பாடு ஆசிரியர்: ஞான ராஜசேகரன்  வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ். நூல் அறிமுகம்: இ.தங்கமணி, ஆசிரியர் . ஞான ராஜசேகரன் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அலுவலர், கலை இலக்கிய ஆர்வலர் ,திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவர். அவர் தனது அரசுப் பணி அனுபவங்களை விவரிக்கும் 32 சுவையான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.  நூலின் தலைப்பே சொல்வது போல தனது பணிக்காலத்தில் இயன்றவரை நேர்மையாக கடமையை செய்தவர் ஞானசேகரன். அவ்வப்போது எதிர்கொண்ட சவால்களையும் நெருக்கடிகளையும் சுவைபட கூறி இருக்கிறார். அதே நேரத்தில் நேர்மை என்ற பெயரில் தேவையற்ற கெடுபிடிகளை செய்யும் மனிதாபிமானமற்ற அலுவலர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்கிறார். கீழ்கண்ட வரிகளே நூலாசிரியரின் ஆளுமையை நிரூபிப்பதாக உள்ளது.   "ஐஏஎஸ் தந்த நேர்மை திமிரை வெளிகாட்டி அரசியல்வாதிகளுடன் ஆன உறவை நாசமாக்கிக் கொள்வதால் மக்களுக்கு நமக்கோ யாதொரு பலனும் இல்லை. என் சர்வீஸில் பலமுறை அரசியல் தலைவர்கள் சிபாரிசு செய்ய லிஸ்ட்டோடு என்னிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் எப்போதும் தொண்...

பாவை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம். நூல் தலைப்பு: பாவை.  நூலாசிரியர்: மு வரதராசனார்.  நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன். ‘பாவை’ இது 1944ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு அற்புதமான புதினம். கதைச்சுருக்கம்:  ஒரு கிராமத்து மணியக்காரரின் மகன் பழனியப்பர். கல்லூரிப் படிப்பைப் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து இருக்கிறான். அதே கிராமத்தில் வேலுப்பிள்ளை என்பவரின் மகளான பாவையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். பாவை, இவன் பள்ளியில் படிக்கும் பொழுது, அதேப் பள்ளியில் சிறுமியாக படித்தவள். பாவை பள்ளிக்குச் செல்லும்போது பழனியின்(பழனியப்பர்) தாயார் அவளை அழைத்து தலைவாரி பூச்சூடி அழகு பார்ப்பது வழக்கமாக இருந்தது. பழனியின் தாயாருக்கு பெண் குழந்தை இல்லாததால் அவ்வாறு செய்து மகிழ்ந்தார். அதனால், பாவை மருமகளாக வருவதை தன் தாயார் எதிர்க்க மாட்டார் என்று நம்புகிறான் பழனி. ஆனால், பழனியின் தந்தை மணியக்காரர் இந்த காதலுக்குஎதிர்ப்பு தெரிவிக்கிறார். தன் மகனுக்கு தன் ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்து மணமகள் தேடுகிறார். மணியகாரர் மற்றும் வேலுப்பிள்ளை குடும்பங்களுக்கு நல...

லவ் யூ சென்னை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம். நூல் தலைப்பு: லவ் யூ சென்னை  ஆசிரியர்: டாக்டர் கோ. ஒளி வண்ணன். பதிப்பு: எழிலினி பதிப்பகம். பக்கம்: 144 விலை: ரூ.300 நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன். எம்ராய்ட், எழிலினி பதிப்பக உரிமையாளர் திரு. கோ.ஒளிவண்ணன் அவர்கள் எழுதிய குறுநாவல் இது. இது இந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலின் சிறப்பு சமகாலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதையாகும். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நூறு உயிர்கள் காணாமல் போனதும், லட்சக்கணக்கான வாகனங்கள் பழுதானதும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமானதும் அனைவரும் அறிவோம். இந்த அவலத்தை நம் கண்ணுக்கு படம் பிடித்து காட்டுகிறார். அரசு நிர்வாக செயல்படாமல், முடங்கி இருந்தால் இது போன்ற சீரழிவுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.   இந்த பேரழிவில் தன் பெற்றோர்களை இழந்த ஒரு மாணவியின் கண்ணீர் கதையை விவரிக்கிறார் நூலாசிரியர். கோவையில் படித்து வரும் அந்த மாணவி, தன் தந்தையிடம...

நானும் ஒரு பெண்தானே! நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்: நூல்: நானும் ஒரு பெண்தானே! ஆசிரியர்: நூலகர் சி சரவணன்  பக்கம்: 206. விலை 200 பதிப்பு: பாரதி பதிப்பகம்  நூல் அறிமுகம்:  கூத்தப்பாடி மா.பழனி செயலாளர் தருமபுரி மாவட்டப் படைப்பாளர் - பதிப்பாளர் சங்கம் பேச : 96265 87770 நூலகர் சி. சரவணன் அவர்கள் எழுதி இருக்கும் நானும் ஒரு பெண்தானே! என்னும் இந்த நாவலை நான் வாசிக்கத் தொடங்கியது முதல், படித்து முடிக்கும் வரை அடுத்து என்னவாக இருக்கும்? என்னும் எதிர்பார்ப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இது ஓர் அற்புதமான கதை. எளிய நடையில், நல்ல தமிழில், பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பு.  கதை நாயகன் சக்திவேல். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞன். கதை நாயகி உமா. சென்னையைச் சேர்ந்த படித்த இளம்பெண். இருவரும் கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே துறையில் பணிபுரிவதால் நெருங்கிப் பழகுகின்றனர். ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள மனதளவில் விரும்புகின்றனர். ஆனால், வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை....

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம். நூல்: கற்பது உலகளவு  கல்வியாளர் தா.நெடுஞ்செழியன் விகடன் பிரசுரம். நூல் அறிமுகம்: இ. தங்கமணி . --------+++++++------++------- கல்விதான் சமூகத்துக்கு வேர். ஒரு தேசம் கல்வியை எவ்வாறு புரிந்து கொள்கிறது, அடுத்த தலைமுறைக்கு எப்படி கல்வியை எடுத்து செல்கிறது என்பதில்தான் அத்தேசத்தின் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் அடங்கி இருக்கிறது. கல்வி என்பது ஓர் இனிமையான பயணம். ஒரு குழந்தை பிறந்ததும் எப்படி இயல்பாக மொழியை கற்றுக் கொள்கிறதோ அப்படி ஒரு நிகழ்வுதான் கல்வியும்.  இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி அறிவு பெற்று மனிதவளம் மிகுந்திருப்பது தமிழகத்தில்தான். கல்வியை முறைப்படுத்தி தகுந்த தரத்தில் வழங்கினால் தமிழகம் உலகத்தை வழிநடத்தும் வல்லமை பெறும். புதிய தொழில்நுட்பங்கள் வரவர அதற்கு ஏற்ப திட்டங்களையும் கற்பித்தல் முறைகளையும் உருவாக்க வேண்டும். மாணவர்கள் உலகளாவிய வாய்ப்புகளுக்கு எப்படி எல்லாம் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். பொருத்தமான கல்வியை எவ்வாறு தேர்வு செய்வது என்றெல்லாம் விரிவாக பேசுகிறது இந்நூல்.  நூலாசிரியர் தா.நெடுஞ்செழியன் ...

நெஞ்சமே அஞ்சாதே நீ - நூல் அறிமுகம்.

Image
நூல் தலைப்பு: நெஞ்சமே அஞ்சாதே நீ  நூலாசிரியர்:   டாக்டர் எம் .எஸ்.உதயமூர்த்தி பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்  விலை :80 ரூபாய் நூல் ஆய்வாளர்: ஆய்வியல் நிறைஞர்  மா. செந்தில்குமார், ஆசிரியர் "அஞ்சி அஞ்சி வாழ்வார், இவர் அஞ்சாத பொருள் இல்லை. இந்த அவனியிலே!" என்று பாரதி நம்மை சாடினார் . அச்சமில்லை! அச்சமில்லை! என்றும் முழங்கினார். ஆம், ஒரு குளத்தில் கால் நனைக்கவும், புதியதாக தேர்வு எழுதவும், பொதுவாக எந்த செயல் செய்யவும், நமக்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது . நீங்கள் எதற்கெடுத்தாலும் ஒருவரிடம் மன்னிப்பு கேட்பவரா? ஆம் எனில், நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஏனென்றால், நூலின் ஆசிரியர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி மன்னிப்பு கேட்காதீர்கள்; திடமாக இருங்கள் என்று நம்மை திடப்படுத்துவார். நம்பிக்கை ஏற்படுத்துவார். நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆளுமையை இதில் கூறுகிறார். எண்ணற்ற கடவுள் சிலைகள் எதற்கு? என்ற வினாவை நம்மிடம் கேட்டுவிட்டு, அவரே மாரியம்மன் முதல் சனிபகவான் வரை உள்ள சிலை கூறும் மனம் சார்ந்த கருத்துக்களை நமக்கு பகிர்ந்து அளிக்கிறார்....

வீரான்குட்டி கவிதைகள் - நூல் அறிமுகம்.

Image
வீரான்குட்டி கவிதைகள்   மலையாளத்திலிருந்து தமிழில்: சுஜா வெளியீடு: தன்னறம்நூல்வெளி  9843870059 நூல் அறிமுகம்: இ. தங்கமணி . கேள் : கல்லிடம் கேள்  எவ்வளவு காத்திருந்து ரத்தினமாகியதென நீர்த்துளியிடம் விசாரி  எத்தனை காலக் காத்திருப்பு முத்தாவதற்கென  உதடுகள் இருந்திருந்தால்  அவை சொல்லியிருக்கும்  அன்புடன் ஒரு கை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்று. * குறைந்து குறைந்து காணும் முன்பு  எத்தனை பெரியவராய் இருந்தோம் பரஸ்பரம் நாம்! கண்டுகழித்ததும் சிறிதானோம்  பேசத் தொடங்கியபோது அற்பமானோம் இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால் குறைந்து குறைந்து  இருக்கிறோம் என்றே  சொல்ல முடியாத அளவுக்கு  முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ  நாம் ஒருவருக்கு ஒருவர்? கடவுள் காணக் கிடைக்காதது சாலவும் நன்றல்லவா? * ரூமிக்கு காயங்கள் பட்டாலென்ன  உதடுகளுடன் எப்போதும் வாசிக்க முடிந்ததல்லவா? புல்லாங்குழல் பாடுகிறது. * சொல் சொல் இரண்டுபேர்  காதலிக்கத் தொடங்கும்போது அவர்களை மட்டுமாக்கி  சுற்றியுள்ள உலகம்  சட்டென்று எங்கே போய்த் தொலைகிற...

ஆங்கிலம் (குறுநாவல்) - நூல் அறிமுகம்.

Image
நூல் ஆசிரியர்: சிவசக்திவேல் நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன் . அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள், உயர் கல்வி பயிலும் போது, ஆங்கில மொழியை சரியாக படிக்க முடியாமல் படும் தவிப்பு, அதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், வேதனைகள் - இந்த நூல் விவரிப்பதோடு அதற்கு ஒரு தீர்வும் சொல்கிறது.  இந்தக் கதையில் வறுமையில் இருக்கும் கிராம குடும்பத்திலிருந்து ஒரு மாணவன் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் சேருகிறான். அந்தக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து வந்தவர்கள். இவர் மட்டுமே தமிழ் வழியில் பள்ளியில் படித்ததால் ஆங்கில மொழியை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறார். பிறகு, மனப்பாடம் செய்தாவது தேர்ச்சி பெற வேண்டும் எனும் நோக்கோடு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்ச்சி பெற்று வருகிறார். இவருடைய ஆங்கில உச்சரிப்புகள் கேலிக்குரியதாக இருப்பதாக சக மாணவர்கள் சொல்வதால், மிகுந்த வேதனை அடைகிறார். வகுப்பிலும், குழு கூட்டங்களிலும் ஆங்கிலம் சரியாக பேச முடியாததால் தற்கொலைக்கு போகும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார். கல்லூரிக்கு வந்து, ...

நரிப்பல் - நூல் அறிமுகம்.

Image
நூல்: நரிப்பல். ஆசிரியர்: வெ. இறையன்பு. நியு செஞ்சுரி புக் ஹவுஸ். முதல் பதிப்பு: 2009. நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன். இந்த நூலில் வே. இறையன்பு எழுதியுள்ள 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் 5, 6 பக்கங்கள் உள்ளன. பெரும்பாலான கதைகள், இவருடைய வாழ்க்கையில், தான் கண்டு களித்த, வாழ்க்கையில் நடைபெற்ற, சம்பவங்களை அடிப்படையாக எழுதியுள்ளார். ‘விசுவாசிகள்’ என்னும் சிறுகதையில் தான் உயர் அதிகாரியாக இருந்தபோது ஆக்கிரமிப்புகளை வெளியேற்றுவது தொடர்பான சிக்கல்களுக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். ‘செருப்பு விற்பவர்’ என்னும் சிறுகதையில் செருப்பு விற்பனை செய்யும் தொழிலாளியின் பணி நிலையை குறைத்து மதிப்பிடும் தன் மனைவி திருந்துவது எப்படி என்று விளக்குகிறது.  ‘எல்லாம் அவன் செயல்’ என்னும் சிறுகதையில் குடும்பத் தலைவி சொந்த வீடு வாங்கவும், குழந்தைகளின் படிப்பு முன்னேற்றத்திற்காகவும் சிக்கனமாக இருந்து குடும்பம் நடத்துகிறார். குழந்தைகளை நன்கு படிக்க வைத்ததோடு வீடும் வாங்கி விடுகிறார். பிற்காலத்தில் தன் குழந்தைகளும் கணவனும் இவ்வளவு சிக்கனமாக இருக்க வேண்டிய அவ...

தீராப்பெருவெளி - நூல் அறிமுகம்.

Image
தீராப்பெருவெளி  (கவிதை தொகுப்பு) த. பொன்னரசன் மகிழினி பதிப்பகம்  90951 67007 口 நூல் அறிமுகம்: இ.தங்கமணி. உனக்கான காத்திருப்பில் வனாந்திரப் பெருமழையில் முழுவதும் நனைந்துவிட்டேன் ஆங்கே தலைதுவட்ட தேவையோர் வண்ணத்துப்பூச்சி... 口 மிச்சமற்று எரித்துவிடு சகியே நம் மீகாமம் சாகட்டும் 口 நடுநிசியில் நீரிறைக்கும் சப்தம் விழிகளில் தொங்கும் நிறைகுடங்களில் தளும்பும் மனம்... 口 உனக்கும் எனக்குமான ஆயத்தொலைவு -  ஒரு கற்பனை நகர்தலுடன் சுழியமாகிறது... 口 என்னைத் திறப்பதற்கான கடவுச்சொல்  என்னில் வேர்களாய் வியாபித்திருக்கும் நீயேயறிவாய் அந்த வேர்ச்சொல் உன் பெயர்ச்சொல் என்றறிய  ஏனிந்த தாமதம்... 口 கையை விட்டு நழுவிய  கண்ணாடிச் சில்லுகளிலிருந்து பிறப்பெடுக்கும் எனக்கான பிம்பத்தில் ஓராயிரம் முறை உன்னையே குவிக்கிறது என் விழி... 口 வாழ்வின் எந்த விசையும் என்னை ஈர்த்துவிடவில்லை... எனினும் இவ்வாழ்வு தட்டுப்படுமென தடவுகிறதென் கைகள்.. 口 திசை வேறு  பயணம் ஒன்று  மனதிற்கு  மைல்கற்களில்லை... 口 பட்டால் தெரியும் என்பது பட்டுப்போன பின்னே தெரிகிறது... மரணம் மனிதனைத் திருத்த...

நிறை குளம் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல் தலைப்பு: நிறைகுளம் - நாவல் நூலாசிரியர்: பெ.மகேந்திரன்  மின்னங்காடி பதிப்பகம்  78240 49160 நூல் அறிமுகம்: இ. தங்கமணி. பேய்ந்து விளையுது மலையாள பூமி  பாய்ந்து விளையுது தஞ்சாவூர் பூமி  காய்ந்து விளையுது கரிசல் பூமி. நான் சிறுவனாக இருக்கும்போது பொடிமட்டை என்ற பெரியவர் ஊரில் இருந்தார். அவர் இயற்பெயர் யாருக்கும் தெரியாது ‌. நல்ல பெரும்பாடி ஆள். எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பார். பாக்கெட் நிறைய காகிதங்களும் ஒரு முரட்டு பேனாவும்.  கையில் காபிதூள் நிறத்தில் ஒரு தோல்பையும் அவரது அடையாளம். நான் இல்லாவிட்டால் மொரப்பூருக்கு ரயில் வந்திருக்காது, நான் சொல்லி தான் அரூர் சர்க்கரை ஆலை வந்தது என்பார். வாணியாறு அணை கட்ட மனு எழுதி இருக்கிறேன் என்பார். அன்றாடம் மனு எழுதுவதே அவரது வேலை.  கரிசல்காடு படைப்பாளிகள் விளையும் மண். அம்மக்களின் கனவுகளை, எதிர்பார்ப்புகளை காலந்தோறும் படைப்புகளாக எழுதி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் நிறைகுளம் கிராமம். கரிசல் மண்ணின் சம்சாரிகள் வானம் பார்த்த பூமியில் நம்பிக்கையை மட்டுமே முத...

விடுபட்ட கவிதைகள் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்; விடுபட்ட கவிதைகள் நூலாசிரியர்: கவிஞர் கோகுல் காளியப்பன். நூல் அறிமுகம் : கூத்தப்பாடி மா. பழனி. விடுப்பட்ட கவிதைகள் என்ற தலைப்பை படித்த உடனே இவர் ஏற்கனவே கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கின்றவர் என்ற புரிதலை புத்தகத்தின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது. ஏற்கனவே இவர் எழுதி வெளியிட்ட இரண்டு படைப்புகளின் புத்தகங்களில் இடம்பெறாமல் போன தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கவிதைகளை "விடுப்பட்ட கவிதைகள்"- என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளிவருவது மிகப் பொருத்தமானதாகும்.  கவிஞர் கோகுல் காளியப்பன் அவர்களை பொறுத்த வரை எந்த ஒரு பணியையும் மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் செய்து முடிக்கும் அற்புதமான ஆற்றல் வாய்ந்த கவிஞர். தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு செயலாற்றி வருபவர். அத்தோடு மட்டுமல்லாமல் மன்றத்தின் அனைத்து விழாக்களுக்கான அழைப்பிதழ், நூல் திறனாய்வுக்கான அழைப்பிதழ் என அழகாக வடிவமைத்துக் கொடுத்துவருபவர். கவிஞர் கோகுல் காளியப்பனின் விடுபட்ட கவிதைகள் எனும் நூலில்...

மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்: மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும். நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன். மகாகவி பாரதியார் இவ்வளவு அருமையாக நகைச்சுவைக் கதை எழுதுவார் என்று இந்தக் கதையைப் படித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது.   பழனியப்பா பிரதர்ஸ் மாணவர்களுக்காக வெளியிட்ட பாரதியார் கதைகளின் சிறிய தொகுப்புதான் இந்த நூல். இதில் பல கதைகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தக் கதை - பேய்க் கூட்டம். பாரதியார் கதையை இவ்வாறு தொடங்குகிறார்:   இரவு 12 மணிக்கு நான் எந்த காரணத்தினாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டு இருந்தேன். ‘தூக்கம் வராது போனால் அருவியை நினைத்துக் கொண்டு, அது சலசலவென்று விழும் ஓசையிலே மானசீகமாக செவியை செலுத்திக் கொண்டிருந்தால் சிறிது நேரத்திற்குள் தூக்கம் வந்துவிடும்’ என்று நான் குழந்தையாய் இருந்தபோது ஒரு புஸ்த்தகத்தில் படித்திருந்தேன். அந்தப்படி அருவியை நினைத்தால், பாதி இரவில் அந்த ஞாபகத்தில் இருந்து குளிர் அதிகப்படுகிறதே ஒழிய, தூக்கம் வருகிற பாட்டைக் காணோம்.  நான்கு சாளரங்களையும் சாத்தினேன்; பிறகு காற்றோட்டம் இல்லாத அறைய...

அந்த மூன்று நாட்கள் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்: அந்த மூன்று நாட்கள். நூலாசிரியர்: தகடூர் மணிவண்ணன். வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம். நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா.பழனி. " அந்த மூன்று நாட்கள்" என்ற இந்த புதினம் படித்து முடித்ததும் தகடூர் அ. மணிவண்ணன் ஐயாவிடம் இப்படியொரு எழுத்தாற்றல், கற்பனையாற்றல் இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தது என்ற கேள்வி என்னுள் எழுந்தது? இவர் ஏற்கனவே எழுதியிருக்கும் "தோகைமலை தென்றல்" - என்ற இவரது நூலைப் படித்திருக்கின்றேன்.   அதைத் தொடர்ந்து "ஆபத்துக்கு பாவமில்லை" என்ற பெயரில் சிறுகதை நூல் ஒன்றையும் எழுதி இருக்கிறார். இந்த இரண்டு நூல்களும் சமீபத்தில் எழுதப்பட்ட நூல்கள்.  இந்த நூல்களை வாசகர்கள் படித்து முடிக்கும் முன்பாகவே 400 பக்கங்களுக்கு மேல் ஒரு புதினத்தை "அந்த மூன்று நாட்கள்" என்ற தலைப்பில் படைத்திருப்பதன் மூலம் இவரது எழுத்தாற்றல் என்னை வியக்க செய்கிறது. புதினத்தை படிக்க தொடங்கியதும் "அந்த மூன்று நாட்கள்" என்ற பெயர் இந்த புதினத்திற்கு ஏன் வைத்திருக்கிறார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. புதினத்தை பட...