Posts

Showing posts from October, 2024

விடுபட்ட கவிதைகள் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்; விடுபட்ட கவிதைகள் நூலாசிரியர்: கவிஞர் கோகுல் காளியப்பன். நூல் அறிமுகம் : கூத்தப்பாடி மா. பழனி. விடுப்பட்ட கவிதைகள் என்ற தலைப்பை படித்த உடனே இவர் ஏற்கனவே கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கின்றவர் என்ற புரிதலை புத்தகத்தின் தலைப்பு நமக்கு உணர்த்துகிறது. ஏற்கனவே இவர் எழுதி வெளியிட்ட இரண்டு படைப்புகளின் புத்தகங்களில் இடம்பெறாமல் போன தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கவிதைகளை "விடுப்பட்ட கவிதைகள்"- என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளிவருவது மிகப் பொருத்தமானதாகும்.  கவிஞர் கோகுல் காளியப்பன் அவர்களை பொறுத்த வரை எந்த ஒரு பணியையும் மிகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் செய்து முடிக்கும் அற்புதமான ஆற்றல் வாய்ந்த கவிஞர். தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு செயலாற்றி வருபவர். அத்தோடு மட்டுமல்லாமல் மன்றத்தின் அனைத்து விழாக்களுக்கான அழைப்பிதழ், நூல் திறனாய்வுக்கான அழைப்பிதழ் என அழகாக வடிவமைத்துக் கொடுத்துவருபவர். கவிஞர் கோகுல் காளியப்பனின் விடுபட்ட கவிதைகள் எனும் நூலில்...

மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்: மிளகாய்ப்பழச் சாமியாரும் வாழைப்பழச் சாமியாரும். நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன். மகாகவி பாரதியார் இவ்வளவு அருமையாக நகைச்சுவைக் கதை எழுதுவார் என்று இந்தக் கதையைப் படித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது.   பழனியப்பா பிரதர்ஸ் மாணவர்களுக்காக வெளியிட்ட பாரதியார் கதைகளின் சிறிய தொகுப்புதான் இந்த நூல். இதில் பல கதைகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தக் கதை - பேய்க் கூட்டம். பாரதியார் கதையை இவ்வாறு தொடங்குகிறார்:   இரவு 12 மணிக்கு நான் எந்த காரணத்தினாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டு இருந்தேன். ‘தூக்கம் வராது போனால் அருவியை நினைத்துக் கொண்டு, அது சலசலவென்று விழும் ஓசையிலே மானசீகமாக செவியை செலுத்திக் கொண்டிருந்தால் சிறிது நேரத்திற்குள் தூக்கம் வந்துவிடும்’ என்று நான் குழந்தையாய் இருந்தபோது ஒரு புஸ்த்தகத்தில் படித்திருந்தேன். அந்தப்படி அருவியை நினைத்தால், பாதி இரவில் அந்த ஞாபகத்தில் இருந்து குளிர் அதிகப்படுகிறதே ஒழிய, தூக்கம் வருகிற பாட்டைக் காணோம்.  நான்கு சாளரங்களையும் சாத்தினேன்; பிறகு காற்றோட்டம் இல்லாத அறைய...

அந்த மூன்று நாட்கள் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல்: அந்த மூன்று நாட்கள். நூலாசிரியர்: தகடூர் மணிவண்ணன். வெளியீடு: திருவள்ளுவர் பொத்தக இல்லம். நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா.பழனி. " அந்த மூன்று நாட்கள்" என்ற இந்த புதினம் படித்து முடித்ததும் தகடூர் அ. மணிவண்ணன் ஐயாவிடம் இப்படியொரு எழுத்தாற்றல், கற்பனையாற்றல் இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தது என்ற கேள்வி என்னுள் எழுந்தது? இவர் ஏற்கனவே எழுதியிருக்கும் "தோகைமலை தென்றல்" - என்ற இவரது நூலைப் படித்திருக்கின்றேன்.   அதைத் தொடர்ந்து "ஆபத்துக்கு பாவமில்லை" என்ற பெயரில் சிறுகதை நூல் ஒன்றையும் எழுதி இருக்கிறார். இந்த இரண்டு நூல்களும் சமீபத்தில் எழுதப்பட்ட நூல்கள்.  இந்த நூல்களை வாசகர்கள் படித்து முடிக்கும் முன்பாகவே 400 பக்கங்களுக்கு மேல் ஒரு புதினத்தை "அந்த மூன்று நாட்கள்" என்ற தலைப்பில் படைத்திருப்பதன் மூலம் இவரது எழுத்தாற்றல் என்னை வியக்க செய்கிறது. புதினத்தை படிக்க தொடங்கியதும் "அந்த மூன்று நாட்கள்" என்ற பெயர் இந்த புதினத்திற்கு ஏன் வைத்திருக்கிறார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. புதினத்தை பட...

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் ( 2) - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்  சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் பாகம் - 2  நூலாசிரியர்: மதுரை நம்பி வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்  பக்கம் 207, விலை 250. நூல் அறிமுகம்: இ. தங்கமணி. தவறுகள் செய்வது நொடிகள்... தண்டனையோ யுகங்களுக்கு...  அடிக்கடி நண்பர்கள் சிலர் கேட்கும் ஆலோசனை ஒன்று உண்டு. அதுவும் புத்தகத் திருவிழா சமயத்தில் இது அதிகம் நடக்கும்.  ஆர்வத்தோடு புத்தகத் திருழாவிற்கு வரும் பலர் எதை வாங்குவது என்று கேட்கும் ஆலோசனை தான் அது. உண்மையில் அவர்களுக்கு நிறைய நூல்களை வாங்க வேண்டுமென்ற விருப்பம்தான். ஆனால் எதை வாங்குவது? யாரிடம் கேட்பது?  இந்த சமயத்தில் நான் கேட்பது உங்களுக்கு பிடித்த துறை எது? நாவல் என்றால் எரியும் பனிக்காடு, வரலாறு என்றால் நள்ளிரவில் சுதந்திரம், சுற்றுச்சூழலுக்கு தியடோர் பாஸ்கரன்... இதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருப்பது.  இனி நிச்சயம் சொல்வேன். மதுரை நம்பி அவர்கள் எழுதிய சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் நூலை.  ஏனென்றால், இந்நூலில் உள்ளவை கட்டுரையா? புனைவா? சிறுகதையா? என்றால், எல்லாவற்றையும் தாண்டி கற்...

கிழவனும் கடலும் - நூல் அறிமுகம்.

Image
வாசிப்பனுபவப் பகிரல்:- தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்  நூல் தலைப்பு: கிழவனும் கடலும் நூலாசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே.  காலச்சுவடு பதிப்பகம். விலை ரூபாய் :95. பக்கங்கள் 104. நூல் அறிமுகம்: சிவம் முனுசாமி . நேற்று நீதிமன்றத்தினுள் ஒரு கொடுமையான காத்திருப்பு நேரத்தில் இந்த புத்தகத்தை வாசிக்க எடுத்தேன்.  ஒரே மூச்சில் வாசித்தும் முடித்தேன். நூலாசிரியரின் நோபல் பரிசு பெற்ற நாவல் இது. சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் வாசிக்க கேட்ட புத்தகம் என்பது கூடுதல் தகவல்.  ஆசிரியர் அமெரிக்காவில் பிறந்தவர். செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உலகப் போர்களில் பணியாற்றியவர். செய்தி நிருபராகவும் இருந்தவர். 1961இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். Google மென்பொருளை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்து பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் சமகால மொழிபெயர்ப்பு நூல்களைப் போல் இல்லாமல் சிரத்தை எடுத்து நாவலை அதே உயிர்ப்போடு மொழிபெயர்த்து இருக்கிறார் எம்.எஸ் என்னும் சிவசுப்பிரமணியன்.  நாவல் ஒரு கிழவனுக்கும் மீனுக்கும் இடையே நடைபெறும் உயிர் போராட்டத்தை விவரிக்கிறது.  ...

ஹார்வர்டு நாட்கள் - நூல் அறிமுகம்

Image
நூல் தலைப்பு: ஹார்வர்டு நாட்கள்  நூலாசிரியர்: இரா.செல்வம் ஐ.ஏ.எஸ் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  பக்கம் 167, விலை. ரூ. 200 நூல் அறிமுகம்: இ   தங்கமணி. நம்முடைய கிளைகள் பரந்து விரியாவிட்டால்  வேர் அழுகி தாவரம் மடிந்து போகும்.  தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் ஒன்றான அய்யப்பநாயக்கன் பேட்டையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தவர் செல்வம். அவர் பணியாற்றிய துறைகளில் தனி முத்திரை பதித்தவர்.  உலகளாவிய நிர்வாக அணுகுமுறையை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் காரணமாக அரசு பணிக்கு இடையில் அமெரிக்கா சென்று உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் பொது மேலாண்மை பயின்றார். அங்கு கிடைத்த அகத்திறப்பு ஒரு நிர்வாகியாக அவருக்குள் அபாரமான சிந்தனைகளை உருவாக்கியது. விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்கட்டமைப்பு, நிதி நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையையும் இந்தியாவில் எப்படி இனி பார்க்க வேண்டும் என்று அவரிடம் உருவான சிந்தனைப் பகிர்வே இந்த நூல். பொதுவாக, இது போன்ற நூல்கள் வெளிநாட்டை வியந்து...

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்:  நூல் தலைப்பு: வேகமாகப் படிக்க - சில எளிய உத்திகள். நூலாசிரியர்: ம.லெனின். வெளியீடு: சிக்த்சென்க்ஸ். பக்கங்கள் 128, விலை 166. நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன். நடந்து முடிந்த தருமபுரி புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய நூல்களுள் ஒன்று இது.  சில ஆண்டுகளுக்கு முன்பு ‘Speed reading’ என்னும் சிறிய ஆங்கில நூலை வாசித்திருக்கிறேன். அந்த நூல் விறுவிறுப்பாக, அருமையாக இருந்தது. அதைப்போலத்தான் இந்தப் புத்தகமும் இருக்கும் என்று நினைத்து ‘வேகமாகப் படிக்க - சில உத்திகள்’ என்னும் இந்த நூலை விரும்பி வாங்கினேன்.  ஆவலோடு படித்தேன். நூல் தலைப்பிற்கும் உள்ளே இருக்கும் செய்திகளுக்கும் தொடர்பே இல்லாதது போல இருந்தது. 128 பக்கங்களையும் படித்துப் பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பிற்கும் உள்ளே இருக்கின்ற செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்னும் பொறுப்புணர்ச்சி நூலாசிரியர்களுக்கு இருக்க வேண்டும். எத்தனை பக்கங்கள் எழுதுகிறோம் என்பது முக்கியமன்று. என்ன செய்தி வாசகர்களுக்கு கொடுக்கிறோம் என்பதுதான் முக்...

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம். நூல் தலைப்பு: அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை. நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன். மு முகேஷ் எழுதிய சிறுவர்களுக்கான நூல் இது. 2021 ஆம் ஆண்டு ‘பால சாகித்திய புராஸ்கார் விருது’ பெற்ற நூல் இது. இந்த நூலில் 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றவாறு நவீன ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்பது இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒரு கதையின் தலைப்பு. சிறுமிக்கு தன் தாயார் தினமும் கதை சொல்லி வந்த நிலையில், ஒருநாள் கதை சொல்ல கதை இல்லாததால், தனக்கு ஒரு கதை சொல்லுமாறு மகளிடம் கூறுகிறார். மகளும் அருமையான கதை ஒன்றை சொல்கிறாள். ‘பழைய பாட்டியும் புது வடையும்’ என்னும் கதையில் காலங்காலமாக பாட்டி வடை சுடும் கதையை, தற்காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களோடு கொடுத்திருக்கிறார். ‘அன்புள்ள அப்பாவுக்கு’ என்னும் கதையில் தந்தையார் புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக சிறுமை எடுக்கும் முயற்சியை அழகாக விவரிக்கிறார் நூலாசிரியர். ‘குதிரை வியாபாரி குப்புசாமி’ என்னும் கதையில் மாணவர்கள் சுயமாக சந்திக்க வேண்டும் என்பதை விளக்கு...

தமிழ்நாட்டில் காந்தி - நூல் அறிமுகம்.

Image
தமிழ் நாட்டில் காந்தி. 1934-ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் காந்தி. ஏறத்தாழ எட்டு மாத காலம். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாடு முழுக்க வலம்வந்தார் அவர். வில்வண்டி, நான்கு சக்கர வாகனம், புகைவண்டி என எல்லா விதங்களிலும் இடைவிடாமல் பயணம் செய்து 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்தார். ஏறத்தாழ இரண்டுகோடி மக்கள் காந்தியை நேரில் காணவும் அவருடைய உரையைக் கேட்கவும் அவருடைய பயணத்தின் நோக்கத்தை உணரவும் செய்தார்கள். தீண்டாமை ஒழியப் பாடுபடுமாறு சென்ற இடங்களிலெல்லாம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காந்தியின் பயண ஏற்பாடுகளை இந்திய ஹரிஜன சேவா சங்கத் தலைவரான தக்கர் பாபா கவனித்துக் கொள்ள, கன்னியாகுமரியில் அவருடன் இணைந்துகொண்டார் ராஜன். ஒவ்வொரு நாளும் செல்லவேண்டிய ஊர்கள், கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள், தங்க வேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் கச்சிதமாக வடிவமைத்ததில் ராஜனுக்குப் பெரும்பங்குண்டு. அதைத்தவிர காந்தியி...

தண்ணீரின் சிரிப்பு - நூல் அறிமுகம்.

Image
நூல் தலைப்பு : தண்ணீரின் சிரிப்பு.  நூலாசிரியர்: பூவிதழ் உமேஷ் எதிர் வெளியீடு. நூல் அறிமுகம்: இ. தங்கமணி, ஆசிரியர். துக்கத்தைப் போல எதுவும் நெருக்கமாக நம்மைப் பாதிப்பதில்லை. எனவே, துக்கத்தைப் போல என்னிடம் நெருக்கமாக இருங்கள். நான் பாலைவனத்தில் ஒரு வசனத்தை எழுதி உள்ளேன்.‌ அதை வானத்திலிருந்து மட்டுமே படிக்க முடியும். எனக்கு பறப்பதற்கு  இறக்கைகள் எதுவும் முளைக்கவில்லையே  என்னும் கவலை எதுவுமில்லை.  நான் மரிப்பேன்  நான் புதைவேன்  நான் மண்ணாவேன்  தூசாகி  காற்றில் பறப்பேன் பகிர்ந்து அளிக்க தெரிந்தவர்கள்  கடவுளோடு சேர்ந்து சாப்பிடுகிறார்கள்  நல்ல புத்தகத்தின் ஒவ்வொரு தாளையும்  ஒரு கதவு போல திறந்து  உள்ளே போகிற வாசகன்  கடைசியில் ஒரு தேவதையிடம் கை குலுக்குகிறான் எங்கு செல்கிறோம் என்று தெரியாத போது  ஏன் வேகமாக ஓட வேண்டும்?  மௌனம் கசப்பை குறைக்கிறது  எலியை வளைக்குள் பார்த்துவிட்ட பூனை அதன் கால் தடத்தின் மீதே அமர்ந்து ஓய்வெடுக்கிறது இனி இந்தப் பழத்தை கிளைக்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று நினைத்தபோது ஆதாம்...

கடைசி பெஞ்ச் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -34. நாள்: 05.10.24 நூல்: கடைசி பெஞ்ச் ஆசிரியர்: தமிழ் மகன் ப.இளங்கோ. பக்கம் 129, விலை ரூ.200. அறிமுகம்: கூத்தப்பாடி மா பழனி கடைசிபெஞ்ச் என்ற வார்த்தையை படித்ததும் பள்ளி கல்லூரிகள் நினைவுக்கு வருகிறது.  கடைசி பெஞ்சு என்ற இந்த சிறுகதை நூலில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற  எதிர்பார்ப்போடு படிக்க துவங்கினால் ஒவ்வொரு சிறுகதையிலும் ஓர் அறக்கருத்துக்கள் இடம்பெற்றிருக்கிறது. கடைசி பெஞ்ச் என்ற இந்த நூலில் 12 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கிறது.  நூலாசிரியர் தமிழ்மகன் ப. இளங்கோ ஐயா அவர்கள் மிக அற்புதமாக சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது ஒவ்வொரு சிறுகதை படைப்பும் படிப்பவர்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் விதமாக  நீதி போதனைகளையும், நன்னெறி கருத்துக்களையும் எடுத்துச் சொல்லும் விதமாக கதைக்களம் அமைந்திருப்பது மிகச் சிறப்பான ஒன்றாகும். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்ற சிறுகதையில் இன்றைய குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை நினைத்துப் பார்க்க வைக்கிறது. பழைய காலங்களில் நம்முடைய குடும்ப உறவுகள் சுற்றம்சூழ எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்...

பரோட்டா ராஜா - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்  நூல்: பரோட்டா ராஜா. நூலாசிரியர்: தோ.ம. மோனிகா நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா. பழனி. ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியாக இருந்தாலும் தன்னுடைய எண்ணங்களையும் கற்பனைகளையும் கலந்து பத்து சிறுகதைகளை அற்புதமாக எழுதி இருக்கிறார். ஒவ்வொரு கதையும் ஓர் அறக்கருத்தை வலியுறுத்தும் விதமாக கதைகள் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. கை, கால் முளைத்த தக்காளி என்ற சிறுகதையில் அவரவர் இருப்பிடங்களில் சந்தோஷமாக இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த சிறுகதை அமைந்திருக்கிறது. மேகமலை சிங்கராஜா சிறுகதையில் யாரையும் துன்புறுத்தாமல் நட்புடன் பழக வேண்டும் என்பதை கதை உணர்த்துகிறது. முரட்டு மாடு சிறுகதையில் நாம் அன்பாக இருந்தால் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருப்பார்கள் என்பதை அறக்கருத்தாக சிறுகதை வலியுறுத்துகிறது. பரோட்டா ராஜா சிறுகதை புத்தகத்தின் தலைப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை விளக்குகிறது. அடுத்து என் செல்ல ராஜி குட்டி சிறுகதை மூலமாக அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் பிற உயிர...

நட்சத்திரவாசிகள் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்-33. நாள்: 03.10.2024. நூல்:  நட்சத்திரவாசிகள் ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்பிரமணியன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம். விலை: ரூ.300/ நூல் அறிமுகம்: எழுத்தாளர். தேனிசீருடையான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில்நுட்பம் என்ற துறை மாயவலை விரித்து உலக அறிவுஜீவிகள் அனைவரையும் வளைத்துப் பிடித்து மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது. ஏழ்மையில் அமிழ்ந்து கிடக்கும் இந்தியா போன்ற நாடுகளின் வேலையில்லாப் பட்டதாரிகளை உள்வாங்கி அவர்கள் வாழ்வை நட்சத்திர ஜொலிப்பாய் மின்னச் செய்கிறது. மின்னும் நட்சத்திரங்கள் அறிவியல் பூர்வமாக உண்மை ஒளி படைத்தவை. ஆனால் இந்த மண்ணுக்கு வரும்போது மின்மினியாய் மட்டுமே குறைந்த ஒளி தருகிறது. மிகச்சிறிய துணைக் கோளாகிய நிலா தரும் ஒளியில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அவை தருவதில்லை, ஆனால் ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அந்த வலைக்குள் விழும்படியாக தங்களைத் தாங்களே ஒப்படைத்துக் கொள்கிறார்கள் நம் இளைஞர்கள் என்பதோடு தாங்கள் பெரிய அளவில் ஒளி பொருந்தியவர்கள் என்ற கற்பனைச் சிந்தனையோடு உலா வருகிறார்கள். மென்பொருள் தொழில்நுட்ப...

ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -32 நாள்: 2 .10. 2024. நூல்: ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் நூலாசிரியர் : செ. தமிழ் ராஜ் நூல் அறிமுகம் : கா. பாண்டிச்செல்வி ( செம்மலர் மாத இதழ்)  மானுட சிந்தனைப் பதிப்பகம், வண்டியூர், மதுரை -20 விலை: ரூ100.      மானுட சிந்தனைப் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் தமிழ் ராஜ் அவர்களின் ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் கவிதை நூல் வித்தியாசமான வாசிக்கத் துண்டும் தலைப்பு. பொதுவாகவே ஹைக்கூ கவிஞர்கள்,  இயற்கை சார்ந்த கவிதைகளைத்தான் அதிகம் படைக்கிறார்கள்.  இதற்கு நமது கவிஞர் தமிழ் ராஜா அவர்களும் விதிவிலக்கல்ல.  பெரும்பாலான கவிதைகள் இயற்கையைப் பாடுகின்றன.  நதியினில் தள்ளாடும் படகு  சிறகுகளால் துடுப்பிசைக்கும் பறவைகள்  தலைகீழாய் நேரில் ஆடுகிறது பனை காட்சிப் பிழை  படகோட்டியிடம் பாடல் ஒன்றை இசைத்து மீன்களைக் கைப்பற்றும் பறவைகள்  அழகியழைப் பேசும் இக்கவிதைகள். வாசிக்கும் போதே அந்தக் காட்சியில் ஒன்றிப் போகும் மனசு.  இதுவே பாடு பொருளுக்கும் கவிஞருக்கும் கிடைத்த வெற்றி.  மூன்று வரிகளே நியதி என்பதால்தான...

திண்ணை இருந்த வீடு - நூல் அறிமுகம்.

Image
தகடூர் புத்தகப் பேரவை -  நூல் அறிமுகம்-31. நாள்: 01.10.2024  நூல்: திண்ணை இருந்த வீடு. ஆசிரியர் : சசி எம் குமார் நூல் அறிமுகம்: இளையவன் சிவா வெளியீடு : சந்தியா பதிப்பகம் , சென்னை.      மண்ணில் வாழும் மக்களின் வாழ்வியலை, அவர்களின் வலியை, மண்ணை, மண்ணின் பெருமையை பேசும் படைப்பே மனிதர்களின் மனதில் நிலைத்து நிற்கும். சமூகத்தில் புலப்படும் புறக்கூறுகளை கண்ணுற்று தன் அகத்தில் அதை பாதுகாத்து சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைக்கும் தருணங்களில் அவற்றை மக்களின் மனதில் ஆழப்பதிக்கும் நினைவுகளாக மாற்றும் படைப்புகளே நம்மை வழிநடத்திச் செல்கின்றன. ஒரு காலத்தில் திண்ணை இருந்த வீடுகள் வெவ்வேறு ரகசியங்களை தம்முள் புதைத்துக் கொண்டு சுமைதாங்கிக் கல்லாக சோகத்திலும் ஆற்றாமையிலும் உழன்றுவரும் மனிதர்களுக்கு ஆறுதல் களமாக மாறி இருந்த காலம் ஒவ்வொருவரின் நினைவுகளுக்குள்ளும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன. அன்றைய திண்ணைகள் எத்தனையோ ரகசியங்களை தமக்குள் அடக்கிக் கொண்டு மனிதர்களை ஆற்றுப்படுத்தி வந்தன.      திண்ணை இருந்த வீடுகளில் திண்ணையை எத்தனையோ பேர் பயன்படுத்தி இருப்பார்கள். எத்தனைய...