அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்.
நூல் தலைப்பு: அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை.
நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன்.

மு முகேஷ் எழுதிய சிறுவர்களுக்கான நூல் இது. 2021 ஆம் ஆண்டு ‘பால சாகித்திய புராஸ்கார் விருது’ பெற்ற நூல் இது. இந்த நூலில் 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் ஏற்றவாறு நவீன ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்பது இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒரு கதையின் தலைப்பு. சிறுமிக்கு தன் தாயார் தினமும் கதை சொல்லி வந்த நிலையில், ஒருநாள் கதை சொல்ல கதை இல்லாததால், தனக்கு ஒரு கதை சொல்லுமாறு மகளிடம் கூறுகிறார். மகளும் அருமையான கதை ஒன்றை சொல்கிறாள்.
‘பழைய பாட்டியும் புது வடையும்’ என்னும் கதையில் காலங்காலமாக பாட்டி வடை சுடும் கதையை, தற்காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களோடு கொடுத்திருக்கிறார்.
‘அன்புள்ள அப்பாவுக்கு’ என்னும் கதையில் தந்தையார் புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக சிறுமை எடுக்கும் முயற்சியை அழகாக விவரிக்கிறார் நூலாசிரியர்.
‘குதிரை வியாபாரி குப்புசாமி’ என்னும் கதையில் மாணவர்கள் சுயமாக சந்திக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். 
‘காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி’ என்னும் கதையில் காடுகளில் உள்ள விலங்குகளும் பறவைகளும் தாங்கள் நிறத்தால் சிறந்தவர் என்று எண்ணக்கூடாது என்று விளக்குகிறார் நூலாசிரியர்.
‘யாழினி தந்த பரிசு’ என்னும் கதையில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருத்தி, எழுதப் படிக்கத் தெரியாத தன் தாய்க்கு புத்தகக் கண்காட்சியில் புத்தகம் ஒன்றை வாங்கி பரிசாக அளிக்கிறாள். அதில் உள்ள கதைகளை அவளே தன் தாயாருக்கு வாசித்து காட்டுவதாக கூறுகிறாள். 
‘கட்டை விரலின் கதை’ என்னும் கதையில் ஏகலைவன் கதையில் சில மாற்றங்கள் செய்து கொடுத்துள்ளார். புராதன, இதிகாசக் கதைகளில் மாற்றம் செய்யக்கூடாது என்பதற்கான குறிப்பும் கொடுத்துள்ளார்.
அருமை. சிறுவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
நன்றி.

Comments

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.