வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - நூல் அறிமுகம்.

தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்: 
நூல் தலைப்பு: வேகமாகப் படிக்க - சில எளிய உத்திகள்.
நூலாசிரியர்: ம.லெனின்.
வெளியீடு: சிக்த்சென்க்ஸ்.
பக்கங்கள் 128, விலை 166.
நூல் அறிமுகம்: நூலகர் சி சரவணன்.
நடந்து முடிந்த தருமபுரி புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய நூல்களுள் ஒன்று இது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு ‘Speed reading’ என்னும் சிறிய ஆங்கில நூலை வாசித்திருக்கிறேன். அந்த நூல் விறுவிறுப்பாக, அருமையாக இருந்தது. அதைப்போலத்தான் இந்தப் புத்தகமும் இருக்கும் என்று நினைத்து ‘வேகமாகப் படிக்க - சில உத்திகள்’ என்னும் இந்த நூலை விரும்பி வாங்கினேன். 

ஆவலோடு படித்தேன். நூல் தலைப்பிற்கும் உள்ளே இருக்கும் செய்திகளுக்கும் தொடர்பே இல்லாதது போல இருந்தது. 128 பக்கங்களையும் படித்துப் பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பிற்கும் உள்ளே இருக்கின்ற செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்னும் பொறுப்புணர்ச்சி நூலாசிரியர்களுக்கு இருக்க வேண்டும். எத்தனை பக்கங்கள் எழுதுகிறோம் என்பது முக்கியமன்று. என்ன செய்தி வாசகர்களுக்கு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். பதிப்பாளர்கள் புத்தகங்களை படித்துப் பார்த்து வெளியிடுவது நல்லது.

நன்றி.
மீண்டும் சந்திப்போம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.