நரிப்பல் - நூல் அறிமுகம்.

நூல்: நரிப்பல்.
ஆசிரியர்: வெ. இறையன்பு.
நியு செஞ்சுரி புக் ஹவுஸ்.
முதல் பதிப்பு: 2009.
நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன்.

இந்த நூலில் வே. இறையன்பு எழுதியுள்ள 15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் 5, 6 பக்கங்கள் உள்ளன. பெரும்பாலான கதைகள், இவருடைய வாழ்க்கையில், தான் கண்டு களித்த, வாழ்க்கையில் நடைபெற்ற, சம்பவங்களை அடிப்படையாக எழுதியுள்ளார். ‘விசுவாசிகள்’ என்னும் சிறுகதையில் தான் உயர் அதிகாரியாக இருந்தபோது ஆக்கிரமிப்புகளை வெளியேற்றுவது தொடர்பான சிக்கல்களுக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். ‘செருப்பு விற்பவர்’ என்னும் சிறுகதையில் செருப்பு விற்பனை செய்யும் தொழிலாளியின் பணி நிலையை குறைத்து மதிப்பிடும் தன் மனைவி திருந்துவது எப்படி என்று விளக்குகிறது. 
‘எல்லாம் அவன் செயல்’ என்னும் சிறுகதையில் குடும்பத் தலைவி சொந்த வீடு வாங்கவும், குழந்தைகளின் படிப்பு முன்னேற்றத்திற்காகவும் சிக்கனமாக இருந்து குடும்பம் நடத்துகிறார். குழந்தைகளை நன்கு படிக்க வைத்ததோடு வீடும் வாங்கி விடுகிறார். பிற்காலத்தில் தன் குழந்தைகளும் கணவனும் இவ்வளவு சிக்கனமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்த்துப் பேசும்போது, அவள் படும் மனப்போராட்டம்; குடும்பத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்த போதும் நமக்கு குடும்பத்தில் அங்கீகாரம் இல்லையே என்று வேதனைப்படும் குடும்பத் தலைவியின் நிலையை இந்த கதையில் விளக்குகிறார். 
‘நிறப் பிரிகை’ என்னும் சிறுகதையில் ரயில் பயணங்களில் எவ்வாறு பயணிகள் உரையாடுகிறார்கள்? என்பதை நுட்பமாக கவனித்து, அவர் எழுதியதாக தெரிகிறது. 
‘மரண தண்டனை’ என்னும் சிறுகதையில் வீட்டிற்கு கிளி ஒன்றை வாங்கி வருகிறார் அப்பா. அந்த கிளியை அவரின் மகள் எவ்வாறு பார்த்து ரசிக்கிறாள் என்றும், பிறகு அந்த கிளிக்கு இறக்கை முளைத்து பறந்து போவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதையும் விளக்குகிறது. இவ்வாறு இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் எளிய நடையில் வாசகர்கள் விரும்பி படிக்கும் வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். 
சில கதைகளை படித்தபோது இது கட்டுரை தொகுப்பா? சிறுகதை தொகுப்பா? என்று சந்தேகம் வந்தது. பதிப்புரையை பார்த்தபோது தான் தெரிந்தது சிறுகதைத்தொகுப்பு என்று.
இவை 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகள். இவற்றையே இப்போது எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. 
இந்த நூலை நீங்கள் படித்தால், ‘இப்படிப்பட்ட கதைகளை நம்மாலும் எழுத முடியும்’ என்று தோன்றும். 

(குறிப்பு: இது, இந்த புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய நூல்களுள் ஒன்று. இரயில் பயணத்தில் படித்து முடித்து விட வேண்டும் என்று நினைத்தேன். பொம்மிடியிலிருந்து சேலம் வரும் வரை ஒரு பக்கம் கூட படிக்க முடியவில்லை. அருகில் அமர்ந்து இருந்த இருவர் கைப்பையில் நகைச்சுவை வீடியோக்களைப் பார்த்து சத்தமாக சிரித்துக்கொண்டே இருந்தனர். அவர்கள் சேலத்தில் இறங்கிய பிறகுதான் என்னால் படிக்க முடிந்தது. குளிர்சாதன பெட்டியிலேயே இந்த நிலை என்றால், மற்ற பெட்டிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படிப்பட்டவர்களைப் பற்றி எழுதினாலே பல கதைகள் வந்துவிடும்)
நன்றி!

Comments

  1. சிறப்பு ஐயா
    உங்கள் வாசிப்பு பயணம் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. Final touches 🤣🤣🤣

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.