நெஞ்சமே அஞ்சாதே நீ - நூல் அறிமுகம்.
நூல் தலைப்பு: நெஞ்சமே அஞ்சாதே நீ
நூலாசிரியர்:
டாக்டர் எம் .எஸ்.உதயமூர்த்தி
விலை :80 ரூபாய்
நூல் ஆய்வாளர்: ஆய்வியல் நிறைஞர்
மா. செந்தில்குமார், ஆசிரியர்
"அஞ்சி அஞ்சி வாழ்வார், இவர் அஞ்சாத பொருள் இல்லை.
இந்த அவனியிலே!" என்று பாரதி நம்மை சாடினார் .
அச்சமில்லை! அச்சமில்லை! என்றும் முழங்கினார்.
ஆம், ஒரு குளத்தில் கால் நனைக்கவும், புதியதாக தேர்வு எழுதவும், பொதுவாக எந்த செயல் செய்யவும், நமக்கு தயக்கம் இருக்கத்தான் செய்கிறது .
நீங்கள் எதற்கெடுத்தாலும் ஒருவரிடம் மன்னிப்பு கேட்பவரா? ஆம் எனில், நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஏனென்றால், நூலின் ஆசிரியர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி மன்னிப்பு கேட்காதீர்கள்; திடமாக இருங்கள் என்று நம்மை திடப்படுத்துவார். நம்பிக்கை ஏற்படுத்துவார்.
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆளுமையை இதில் கூறுகிறார். எண்ணற்ற கடவுள் சிலைகள் எதற்கு? என்ற வினாவை நம்மிடம் கேட்டுவிட்டு, அவரே மாரியம்மன் முதல் சனிபகவான் வரை உள்ள சிலை கூறும் மனம் சார்ந்த கருத்துக்களை நமக்கு பகிர்ந்து அளிக்கிறார்.
1.எனது நிறம் கருப்பு, 2.தன்னை மதித்து வாழ்வோம் என்னும் தலைப்புகளில் அவர் சொல்லவரும் கருத்து என்னவாக இருக்கும்? என்பது நமக்கு முன்னமே தெரிந்து விடும்.
"தனித்தன்மையை வளருங்கள்!" என்று அவர் நமக்கு 'எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும்' என்பதை கூறுகிறார்.
மனம் பற்றியும், மனத்தில் எழும் எண்ணங்களை... நல்ல எண்ணங்களாக மடைமாற்றி வாழ்வில் பெரிய சாதனையாளர்களாக வர நமக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடிய ஒரு நூல்.
இது ஒரு தன்னம்பிக்கை நூல்.
ஒரு ஹரிஜன் பொது நீர் குளத்தில் குளிக்க கூடாது. தண்ணீர் மொள்ளக்கூடாது என்பது என்ன கட்டுப்பாடு? என்ன நியாயம்? என்பதை யோசித்துப் பாருங்கள்! என சற்றே சிந்திக்க வைத்து இருக்கிறார்.
'எண்ணம் தான் வாழ்க்கை' என்பதில் அழுத்தம் திருத்தமாக கூறுவதோடு மனம் சார்ந்த பல கருத்துக்களை இதில் கூறியுள்ளார்.
2024 இல் 43-வது பதிப்பில் புதிய வடிவில் புத்தகம் வந்துள்ளது.
கங்கை வெளியீடு. தற்பொழுதும் அவரது அனைத்து புத்தகங்களையும் அனுப்புகிறார்கள். தொடர்பு கொள்ளுங்கள். வாசக நெஞ்சங்களே! 044 24342810, 24310769
நூல் பற்றிய அறிமுகம் மிகவும் அருமை.... அறிமுகம் செய்த விதம் பாராட்டுக்குரியது... நன்றி
ReplyDelete