பரோட்டா ராஜா - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை நூல் அறிமுகம்
நூல்: பரோட்டா ராஜா.
நூலாசிரியர்: தோ.ம. மோனிகா
நூல் அறிமுகம்: கூத்தப்பாடி மா. பழனி.
ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியாக இருந்தாலும் தன்னுடைய எண்ணங்களையும் கற்பனைகளையும் கலந்து பத்து சிறுகதைகளை அற்புதமாக எழுதி இருக்கிறார்.
ஒவ்வொரு கதையும் ஓர் அறக்கருத்தை வலியுறுத்தும் விதமாக கதைகள் அமைத்திருப்பது
பாராட்டுக்குரியது.
கை, கால் முளைத்த தக்காளி என்ற சிறுகதையில்
அவரவர் இருப்பிடங்களில் சந்தோஷமாக இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த சிறுகதை அமைந்திருக்கிறது.
மேகமலை சிங்கராஜா சிறுகதையில் யாரையும் துன்புறுத்தாமல் நட்புடன் பழக வேண்டும் என்பதை கதை உணர்த்துகிறது.
முரட்டு மாடு சிறுகதையில் நாம் அன்பாக இருந்தால் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருப்பார்கள் என்பதை அறக்கருத்தாக
சிறுகதை வலியுறுத்துகிறது.
பரோட்டா ராஜா சிறுகதை புத்தகத்தின் தலைப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை விளக்குகிறது.
அடுத்து என் செல்ல ராஜி குட்டி சிறுகதை மூலமாக அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையை உண்டாக்குகிறது.
ஷிண்டுவும் குட்டிப் புலியும் சிறுகதை எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் எளியோரை துன்புறுத்தக் கூடாது என்ற சிந்தனையை கதை உண்டாக்குகிறது.
அழகான கண்ணாடி சிறுகதையில்
தன்னைப் பற்றி பெருமிதம் பேசுவதை விட்டுவிட்டு எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தனித்தன்மை உடையவர்கள் என்ற சிந்தனையை அழகான கண்ணாடி சிறுகதை உணர்த்துகிறது.
குட்டி பணியாரம் சிறுகதையில் பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் விளையாட வைத்திருக்கும் விதம் அருமை.
சோப்பு பாக்ஸ் தவறு செய்பவர்கள் திருந்துவதற்கான எண்ணத்தை உருவாக்கும் சிறுகதையாக உள்ளது.
அம்பிரல்லா ஏஞ்சல்
சிறுகதையானது ஆசைப்பட்டதை அடையும் ஆர்வத்தை சிறுகதை உணர்த்தியுள்ளது.
இப்படி இந்த நூலில் இடம் பெற்றுள்ள 10 சிறுகதைகளும் படிக்க படிக்க படிப்போரை கற்பனை உலகத்திற்குள் கொண்டு செல்லும் விதமாக சிறுகதை படைத்திருக்கும் சிறுமி தோ.ம.மோனிகாவிற்கு
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இன்னும் இது போன்ற படைப்புகள் தொடர்ந்து வெளிவர முயற்சிக்கவும்.
அருமையான நூல் விமர்சனம்... வாழ்த்துகள்
ReplyDelete