பணக்கார தந்தை ஏழை தந்தை (Rich Dad Poor Dad) - நூல் அறிமுகம்
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் -8
நூல் : பணக்கார தந்தை ஏழை தந்தை (Rich Dad Poor Dad)
நூல் ஆசிரியர் : ராபர்ட் கியோசாகி,
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நூல் அறிமுகம்: திரு. சக்தி
நூல் : பணக்கார தந்தை ஏழை தந்தை (Rich Dad Poor Dad)
நூல் ஆசிரியர் : ராபர்ட் கியோசாகி,
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நூல் அறிமுகம்: திரு. சக்தி
இந்தப் புத்தகம் தான் நான் முதலில் படித்த புத்தகம். ராபர்ட் கியோசகி என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் பொருளாதாரத்தை எப்படி திறம்பட கையாள வேண்டும். நாம் ஏன் இன்னும் ஏழையாக இருக்கிறோம். நாம் பணத்திற்காக வேலை செய்வதை விடுத்து, பணத்தை நமக்காக எப்படி வேலை செய்ய வைப்பது என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். மிகவும் பயனுள்ள புத்தகம் தான்.
இதற்கு எல்லாம் காரணம் பொருளாதார கல்வி குறைபாடு தான். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பணத்திற்காக வேலை செய்கின்றனர். ஆனால் பணக்காரர்களோ பணத்தை வேலை செய்ய விடுகிறார்கள். அதனால் தான் அவர்கள் பணம் குவிக்கின்றனர். இந்த திறன் இல்லாததால் தான் பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஒரு போதும் கற்றுக் கொள்ளாததால் பணத்திற்காக வேலை பார்ப்பதில் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகின்றனர் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்.
இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி என்றால் இந்தியா பணக்கார நாடு ஆகி இருக்க வேண்டும் தானே? இல்லையே காரணம் கல்வி கற்பிக்கும் முறை. பணத்தைப் பற்றியும் அது எவ்வாறு எல்லாம் வேலை செய்கிறது என்பதைப் பற்றியும் யாரும் அறிந்து கொள்ள முற்படுவதில்லை. அவர்கள் கல்லூரிக்குச் செல்கின்றனர். ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கின்றனர்.ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கின்றனர். ஒரு நாள் அவர்கள் கண் விழிக்கும் போது பெரும் பணப் பிரச்சினைகள் அவர்கள் முன் தலை விரித்து ஆடுகின்றன. அப்போது அவர்களால் வேலை செய்வதை நிறுத்த முடியாது. பணத்தை உனக்காக வேலை செய்ய வைப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக வெறுமனே பணத்திற்காக வேலை செய்வதைப் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருப்பதற்குக் கொடுக்கப்பட வேண்டிய விலை அது .
ஏராளமாக சம்பாதித்தால் தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும்
♦ உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும்
♦ உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிப் படிப்பு மட்டுமே உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும்
♦ உங்களிடம் உள்ளவற்றில் எவையென சொத்துப் பட்டியலில் கீழ் வரும் எவையென கடன் பட்டியலின் கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும்
♦ பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
இதுவரை வெளிவந்துள்ள தனிநபர் நிதி நிர்வாகப் புத்தகங்களில் பணக்கார தந்தைத் ஏழைத் தந்தை எனும் இப்புத்தகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
“தங்களுடைய பொருளாதாரத் தலைவிதியை நிர்ணயிக்கத் தேவையான கட்டுப்பாட்டைக் கைவசப்படுத்திக் கொள்ள விரும்பும் எவரொருவரும் துவக்க வேண்டிய இடம் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எனும் புத்தகம்தான்.
Comments
Post a Comment