உரையாடும் காந்தி - நூல் அறிமுகம்.

 தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம்.  - 10.
10.9.2024.

 நூல் தலைப்பு: உரையாடும் காந்தி 

ஆசிரியர்: ஜெயமோகன்
நூல் வெளியீடு: தன்னறம் நூல் வெளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை அஞ்சல், கிருஷ்ணகிரி மாவட்டம்.
நூல் அறிமுகம்: நூலகர் சி. சரவணன்.
 
தேசப்பிதா காந்தியைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும் கேள்வி பதிலாக கட்டுரைகள் அமைந்துள்ளன. 

‘உரையாடும் காந்தி’ - என்பது இந்த நூலில் உள்ள கடைசிக் கட்டுரை. 
இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு எழுதி குவித்திருக்கிறார் காந்தியடிகள்.
 அரசியல் கட்டுரைகள், மருத்துவம், பொருளாதாரம் , கல்வி, அறிக்கைகள் என எல்லாத் தளங்களிலும் தொட்டு இருக்கிறார். காந்தியை எல்லாக் கோணங்களில் இருந்தும் ஆய்வு செய்து இருக்கிறார் நூலாசிரியர். இந்த நூல் வாசிப்பதன் மூலம் காந்தியை நன்கு புரிந்து கொள்ள முடியும். காந்தியைப் பற்றிய ஐயப்பாடு, சந்தேகம் உள்ளவர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் தெளிவு பெற முடியும். 

காந்தியை அவதூறாக விமர்சிப்பவர்களுக்கு இந்த நூலை நூலாசிரியர் சமர்ப்பணம் செய்திருப்பது நூலாசிரியரின் பெருந்தன்மையை, காந்தியத்தன்மையைக் காட்டுகிறது. இதைப் பார்த்த போது, தன்னை ஷூ வால் உதைத்த சிறை அதிகாரி ஜேன் ஸ்மட்ஸ்க்கு (Jan Smuts) தன் கையால் ஷூ தயாரித்து பரிசளித்த காந்தி நினைவுக்கு வருகிறார்.

 காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை? என்ற கேள்விக்கு: காந்திக்கு நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்டபோது, அவர் உலகில் புகழ்பெற்ற தலைவராக இருந்தார். அவருடைய அகிம்சை வழி உலக அளவில் புகழப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் பல்வேறு காலனி ஆதிக்க நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் தலைதூக்கின.   இந்த போராட்டங்களுக்கு காந்தி மாபெரும் தூண்டுதலாக இருக்கிறார் என்று ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் எண்ணின. இந்த நேரத்தில் காந்திக்கு நோபல் பரிசு கொடுப்பது சரியாக இருக்காது என்று நோபல் பரிசுக் குழு எண்ணியது. இதனால்தான் காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் இன்றுவரை அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலோர் காந்திய வழியை பின்பற்றுபவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. 
 பிற்காலத்தில் அதற்காக அந்த அமைப்பு வருத்தம் தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.

1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது நடைபெற்ற வன்முறைகளைக் கண்ட உலக நாடுகள் இந்தியா தாக்கு பிடிக்காது என்று நினைத்தன.  இந்திய தலைவர்களுள் சிலரும் அப்படித்தான் நினைத்தார்கள்.  இந்தியாவில் கலவரத்தை கட்டுப்படுத்த காந்தி எடுத்த முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்தது. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்படுவதை அறிந்த காந்தி, அந்த நாட்டு அரசு வன்முறையைத் தடுக்கவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்திய ஜனநாயகம் காந்தியின் கொடை.  இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் ஜனநாயகம் தள்ளாடும்போது, இந்திய ஜனநாயகம் நீடித்து, நிலைத்து இருப்பதற்குக் காரணம் காந்தியின் அகிம்சை வழிதான் என்பதை இந்த நூல் வாசிப்பதன் மூலம் தெரிகிறது.

 தமிழ் ஈழப் போராட்டம் காந்தி வழியில் இல்லாமல் ஆயுதப் போராட்டமாக இருந்ததால்தான், அந்தப் போராட்டம் வெற்றி அடையவில்லை என்கிறது இந்த நூல். 

‘நமது பேச்சாளர்கள்’ என்னும் தலைப்பில் உள்ள கட்டுரையில், மேடைகளில் இங்கே தேவைப்படுவது கோபமான, நக்கலான ஒரு பாவனை, அதற்கு ஏற்ப ஒரு மொழி நடை, இதற்குத் தேவையான உதிரி மேற்கோள்கள், சில்லறைத் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், குட்டி கதைகள், காந்தியை பற்றிய அவதூறுகள்.  அனால், நல்ல பேச்சாளர் அதிகம் வாசிப்பார்.  வாசித்ததை பேசும் வல்லமை பெற்றிருப்பார்.’ என்கிறது அந்தக் கட்டுரை.

‘காந்தியைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு விளக்கம் தரும் புத்தகம் அல்ல இது’. 
‘காந்தியைப்பற்றி சிலர் பரப்பும் அவதூறுகளுக்கு பதில் தேடுபவர்களுக்கான நூல் இது’.

"காந்தி ஒரு திறந்த புத்தகம். அவரது வாழ்க்கையே அவர் சொல்லும் செய்தி. சொல்வதைப் போல் வாழ்ந்து காட்டியவர். காந்தியின் அகிம்சை வழியை மாணவர்களுக்கு நாம் போதிக்கத் தவறிவிட்டோம். அதனால்தான் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்" - இது என் கருத்து.
நன்றி.

Comments

  1. காந்தியடிகள் அவர்களுக்கு நோபல் பரிசுக்காக மூன்று முறை பரிந்துரை செய்யப்பட்டபோது அதன் நிராகரிக்கப்பட்டது ஆனால் மனதில் ஏன் என்ற கேள்வி எழுந்து கொண்டு இருந்தது. அதற்கான விடை கிடைத்தது இந்த நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.