வைக்கம் போராட்டம் - நூல் அறிமுகம்.
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் - 9
நூல்: வைக்கமும் பெரியாரும்.
அறிமுகம்: வெ.ராஜன்
1922ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி கேரள காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கே.பி.கேசவன் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் 'கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில்', நன்கு கவனிக்கவும் சுற்றியுள்ள தெருக்களில் செல்ல தடுக்கப்பட்டு இருந்த ஈழவரையும், புலையரையும் தடையை மீறி அழைத்துச் செல்வதாக அறிவித்தார். அந்த நீண்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்தது.
இந்தப் போராட்டத்தைப் பற்றி நீண்ட, விரிவான, அனைத்து தரவுகளையும் கொண்டு பழ.அதியமான் 'வைக்கம் போராட்டம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர் சிறந்த புத்தகம் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 325 ரூபாய் .
அதில் அவரது முன்னுரையில் இருந்து ஒரு சிறு பகுதி.
" வைக்கம் என்றதும் தமிழ்நாட்டுக்கு நினைவுக்கு வரும் முதல் உருவமும் பெயரும் பெரியார்தான். 1905 முதல் இன்றுவரை இதே நிலைமை தான்.
அலுவலக ரீதியாக தொடர்பில் இருந்த தேனி நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மகள் பெயர் 'வைக்கம் 'என அறிந்தேன்.தற்போது அவர் சட்டக் கல்லலூரி மாணவி. சிதம்பரம் ,மதுரை கன்னியாகுமரி போன்ற மனிதர்களை அறிந்திருந்தாலும் இப்பெயரை கேட்டதும் ஆச்சரியப்பட்டேன். தொடர்ந்து அவர் பேசியதைக் கேட்டு கண்ணீர் மல்கினேன்.
குழந்தை நடக்க ஆரம்பித்ததும் வைக்கத்திற்கு கூட்டி போனாராம். எந்த தெருவில் தீண்டாதார் நடக்க அனுமதி இல்லாமல் இருந்ததோ அந்த வைக்கம் கோயில் மேற்குத் தெருவில் குழந்தையை நடக்க விட்டாராம். தத்தித் தத்தி நடந்த குழந்தைக்கு பின்னிருந்து 'வைக்கம்,வைக்கம்' என்று அவர் அழைத்து மகிழ்ந்தாராம். வைக்கம் வாசிகள் பைத்தியமோ என்று விசாரிக்கவும், விபரம் அறிந்து திடுக்கிட்டு கலங்கி நின்றனராம்.
ஆமாம். வைக்கம் என்பது ஊரின் பெயர் அல்ல. தமிழகத்தில் அது ஒரு அடையாளம். தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் எனக்கூறி அதற்கு சமய , தத்துவ முலாம் பூசி நம்மை ஈராயிரம் ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருந்த பார்ப்பன சனாதன தத்துவத்தை முறியடித்து சம உரிமை பெறும் முயற்சியில் நாம் கடந்த முதல் படி.
எங்கோ யாருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை இங்கிருந்து ஓடிச்சென்று துடைக்க முயன்றவர் பெரியார்.
பெரியார் மட்டுமே வைக்கத்திற்காக இரு முறை சிறை ஏகிய சத்தியாகிரகி. சத்யாகிரகிககள் மனசாட்சி காரணமாக சிறைப் பட்டதால் அவர்கள் அரசியல் கைதிகளைப் போலவே சிறையில் நடத்தப்பட்டனர். கேரள தலைவர் கீர்த்தி கேசவ மேனன், தமிழகத் தலைவர் ராஜாஜி போன்றோர் முறையிட்டும் பெரியாருக்கு அரசியல் கைதி என்ற நிலை தரப்பபடவே இல்லை .
கடைசிவரை காலில் இரும்புச் சங்கிலியும் கழுத்துவரை மரத்தாலியும் அணிந்து ஒரு கொலைக் குற்றவாளியைப் போல சிறைக் காலத்தை கழிக்க நேர்ந்தது பெரியாருக்கு. நான்கு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதும் பெரியார் ஒருவருக்கே. சிறையில் 24 நாட்களும் வைக்கத்தில் வெளியில் 60 நாட்களும் என 141 நாட்களை வைக்கம் போராட்டத்திற்காக பெரியார் பங்களித்தார்.

Comments
Post a Comment