விண்ணளந்த சிறகு - நூல் அறிமுகம்
தகடூர் புத்தகப் பேரவை - நூல் அறிமுகம் - 6.
நூல்: விண்ணளந்த சிறகு
நூல்: விண்ணளந்த சிறகு
நூலாசிரியர்:
சு .தியோடர் பாஸ்கரன்
நூல் மதிப்புரை:
ச. ஜலஜா ரமணி
தான் மட்டுமே இந்த பூமியின் உரிமையாளன் என்பது போன்ற மனித குல செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக இன்று வாழ்விடத்திற்கு இன்னொரு கோலத்தை விண்ணிலே தேடிக் கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு இந்த பூமிப்பந்து அனைத்து உயிர்க்குமானது என்பதை தாமதமாக உணர்ந்திருக்கும் இந்த தருணத்தில் எத்தனை வகையான பறவைகளையும் விலங்கினங்களை யும், தாவரங்களையும் இயற்கை அம்சங்களையும் இழந்திருக்கிறோம் என்பதை மிக தீவிரமாக உணர்த்தக்கூடிய மென்மையான எளிய மொழி நடையில் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான 35 கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
சு .தியோடர் பாஸ்கரன்
நூல் மதிப்புரை:
ச. ஜலஜா ரமணி
தான் மட்டுமே இந்த பூமியின் உரிமையாளன் என்பது போன்ற மனித குல செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக இன்று வாழ்விடத்திற்கு இன்னொரு கோலத்தை விண்ணிலே தேடிக் கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு இந்த பூமிப்பந்து அனைத்து உயிர்க்குமானது என்பதை தாமதமாக உணர்ந்திருக்கும் இந்த தருணத்தில் எத்தனை வகையான பறவைகளையும் விலங்கினங்களை யும், தாவரங்களையும் இயற்கை அம்சங்களையும் இழந்திருக்கிறோம் என்பதை மிக தீவிரமாக உணர்த்தக்கூடிய மென்மையான எளிய மொழி நடையில் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான 35 கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
முதல் 7 அத்தியாயங்களை புள்ளினங்களுக்காக ஒதுக்கி இருக்கிறார் இவற்றில் தேன் பருந்து, குயில்கள், கானமயில், ,அன்னம் ,வேட்டை வல்லூறு, கிளிகள், செம்போத்து, மணிப்புறா பருத்தி குயில், பழனி சிரிப்பான் ஆகிய அரும் பறவைகளின் வாழ்விடம், கூடுகளை அமைத்தல், வாழ்வியல், இளம் பருவம், தோற்றம் ,அடையாளம் காணும் விதம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். இப்பறவைகளின் வாழ்வு எப்படி தொல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்து இருக்கிறது என்பதை இலக்கியச் சான்றுகளுடன்
சுவைபட எடுத்துரைத்திருக்கிறார்.
பறவைகளின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கக்கூடிய மேம்பாட்டு திட்டங்கள் சாலை அமைத்தல் அணைகள் கட்டுதல் கானுயிர் சட்டங்கள், மனித இடையீடு,கள்ளச் சந்தை,வேட்டை, சுற்றுலா, ஆங்கிலேயர் வருகை இவை எல்லாம் எப்படி பறவைகளின் வாழ்வில் விளையாடி அவை அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவாக உரைத்திருக்கிறார்.
அடுத்த 8 கட்டுரைகள் விலங்கினத்திற் கானவை...
எறும்புத்தின்னிகள் என்று அழைக்கப்படும் அலங்குகள் பெரும்பாலும் நாம் எங்கேயும் நேரடியாக பார்த்திராமல் செய்தித்தாள்களில் எப்போதாவது ஒருமுறை புகைப்படம் வழியாக பார்த்திருக்கக் கூடிய இந்த சிறிய விலங்கு கடந்த பத்து வருடங்களில் ஏறக்குறைய 10 லட்சம் அளவிற்கு கொல்லப்பட்டிருக் கின்றன என்பது அதிர்ச்சியான உண்மை இத்தகைய விலங்குகள் மருந்துகளுக்காக கொல்லப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன .
செந்நாய் ,ஓநாய்,, மேய்ப்பு நாய்கள் அரிய தகவல்கள், செந்நாய்களின் வாழ்வியலை விளக்கும்' the pack 'எனும் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வம் மேலிடுகிறது.
யானைகளின் நம்பிக்கை கூறிய வாழிடமாக இந்தியா இருப்பது ஒரு பெருமையான விஷயமாக இருந்தாலும் அவை கூட மிக சொற்பமான எண்ணிக்கையில் இருக்கின்றன என்பது கவலைக்குரியதே.
நீர் நாய் பற்றிய தரவுகள் ஆய்வுகள் ஆச்சரியத்தை உருவாக்குகிறது. அணைகள் இதை போன்ற சிற்றுயிர்களின் வாழ்விற்கு வாழ்விடத்திற்கு அச்சுறுத்தலாக மாறி விடுகின்றன. அணைகள் கட்டுதும் சாலைகளே போடுவதும் காணுயர்களின் வாழ்விட அழிப்புகளாக மாறுகிறது.
ஹுலக் கிப்பன் எனும் வாலிலா குரங்கு, மரங்களின் உச்சிகளிலேயே தன் வாழ்நாள் முழுவதும் கழித்து விடக்கூடிய இந்த அரிய உயிரினம் மருத்துவத்திற்காக வும் இறைச்சிக்காகவும் கொல்லப்படுவது பரிதாபம்
அடுத்த 3 கட்டுரைகள் தாவரங்களுக்கு...
இமயமலையில் காணப்படும் பல தாவரங்களும் விலங்கினங்களும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் உள்ளன என்பது அதிசயம் தான். டூறுறி ஆர்க்கிட்,நிஷாந்தி எனப்படும் பிரம்ம கமலம் ஆகி தாவரங்களைப் பற்றிய அறிய தகவல்களுடன் கொடைக்கானலில் காணப்படும் குறிஞ்சி மலரை பற்றிய பல தகவல்கள் ,46 வகையான குறிஞ்சி மலர்கள் இருக்கின்றன என்பதெல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கொடைக்கானலில் காணப்படும் பழங்குடியினர் தங்களது வயதை இந்த குறிஞ்சி மலர பூப்பதை வைத்து நினைவு கொள்கிறார்கள் என்பது சிறப்பு. வணிக நோக்கத்திற்காக அடர்ந்த கொடைக்கானல் மழை காடுகளை அழித்தொழித்து அந்த இடங்கள் தேயிலை தோட்டங்களாக ,பச்சை பாலைவனங்களாக மாறி இருக்கின்றன என்பது வேதனை. வரையாடுகள், பழனி சிரிப்பான் போன்ற கொடைக்கானலில் வாழும் அரிய உயிரினங்களை பற்றி பல அறிய தகவல்களை பதிவு செய்திருக்கிறார்
தொடர்ந்த கட்டுரைகளில் சூழியல் ஆர்வளர்களைப் பற்றியும்
கானுயிர்களின் மற்றும் தொல்குடிகளின் நலனுக்காக போராடிய பாடுபட்ட பில்ஜின்,இயன் லக்வுட், தேவிடார்,சேகர் தத்தாரி உள்ளிட்ட பல சூழியல் ஆர்வலர்களின் பங்களிப்பையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு புத்தகம் ( பசுமை இலக்கியம் - சாலிம் அலி - இந்தியப் பறவைகள்) எப்படி தனக்கான முக்கியத்துவத்தை சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் இழக்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர்களின் தரமான மொழிபெயர்ப்பே ஒரு நூலுக்குக்கு தாங்கள் செய்யும் நீதியாக இருக்கும்.
ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் போதும் மிக விறுவிறுப்பாக தமிழ்ச்சூழலோடு தமிழ் இலக்கிய குறிப்புகளோடு தமிழ் இலக்கியங்களில் இந்த விலங்குகள் எப்படி தொல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்து இருக்கிறது என்கின்ற தரவுகளோடு அளித்திருப்பது நம்ம மேலும் மேலும் படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
இறுதியாக,
இந்த நூலின் ஆசிரியர் ஒரு இடத்தில் குறிப்பிடுவதை மனித குலம் மிக ஆழமாக உணர்ந்தால் கானுயிர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
"நாடு என்பது மக்களால் மட்டும் ஆனதல்ல அதில் போடும் ஆறுகள் ஓடைகள் காடுகள் மலைகள் அங்கு வளரும் தாவரங்கள் காட்டுயிர் இவை யாவுமே ஒரு நாட்டின் முழுப் பரிமாணம்".
நூலாசிரியர் திரு சு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் பல பத்தாண்டுகளாக கானுயிர் சார்ந்த பல நூல்களை எழுதுவதுடன். களப்பணியிலும் முனைப்புடன் இருக்கிறார் என்பது மகிழத்தக்கது.
Comments
Post a Comment