ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு - நூல் அறிமுகம்.
விலை: ரூ 100,
இத்தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன.
அதில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை, கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை.
இக்கதையை வாசிக்க ஆரம்பித்ததும் கண் எதிரில் படக் காட்சிகளாக விரிகிறது.
கதை இப்படி ஆரம்பிக்கிறது. இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நீங்கள் என்னை வித்தியாசமாய் பார்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாதபடி ஆண்டவன் எனக்கு காதுகளை காதுகள் போலவும்,கண்ணை கண் போலவும், ரத்தத்தை ரத்தம் போல் சிவப்பாக இருக்கும்படியும் படைத்தான். என்றாலும் நான் ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஆகிவிட்டது..
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் போகிற போக்கில் மிக நுட்டமான சிக்கல்களை எதார்த்தமாகவும் நையாண்டியாகவும் கையாண்டிருப்பார் நூலாசிரியர்.
நதியின் தெளிந்த நீரோட்டம் போன்ற நடை.
அதில் பளிச்சிடும் கூழாங்கல் போன்ற கதை மாந்தர்கள் .
மனதை ஏதோ ஒரு சோகம் கணமாக்கும் போதெல்லாம் இக்கதையை மீண்டும் மீண்டும் வாசிப்பேன். கவலைகள் பஞ்சாய் பறந்து விடும் .
இறுதியில் இப்புத்தகத்தின் தலைப்பாக உள்ள 'ரதி பெண்கள் திரியும் அங்காடி தெரு எனும் கதை'.
கதையின் நாயகன் கடை வீதியில் நடந்தவாறு கடந்த காலத்தில் இந்த கடை வீதியில் தன் வாழ்வில் நடந்த சந்தோச கணங்களை நினைத்தும் நிகழ்கால இயலாமையை ஏமாற்றத்தோடு கடப்பதாகட்டும் - கதையில்
இப்படியாக உரையாடல் தொடங்குகிறது - 'வீட்டிலிருந்து கிளம்பினேன். இருள் கூடிக் கொண்டிருந்தது. கடைவீதியின் ஒவ்வொரு கடையிலும் விளக்குகள் பளிச்சென வெளிச்சம். கூட்ட ஆரம்பித்தன. என் தேனொத்த இனிமையான வீடு சமீப காலங்களில் பாகற்காயாய் உருமாறிய பின்பு கடைவீதிகளுக்கு வருவது அதிகமாகி விட்டது. லாரி ஓட்டுவது , வீட்டுக்கு வருவது, பின் முகம் கழுவிக் கொண்டு கடைவீதிக்கு வந்து விடுவது. வேடிக்கை பார்ப்பது என விலாவாரியாகவும் வித்தியாசமாகவும் விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
நூல் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு.
லளிகத்தைச் சேர்ந்தவர்.
இதில் உள்ள முதல் சிறுகதை தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது. பேருந்தில் நடக்கும் உரையாடல்கள் மிகவும் எதார்த்தமாக வட்டார வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது .
Comments
Post a Comment