சிறிது வெளிச்சம் - நூல் அறிமுகம்

 தகடூர் புத்தகப்பேரவை - நூல் அறிமுகம் -3


சிறிது வெளிச்சம்
 நூலாசிரியர்
எஸ் .ராமகிருஷ்ணன்
நூல் மதிப்புரை:
 ஆய்வியல் நிறைஞர். மா.செந்தில்குமார்.


  உலகில் ஒரு மொழி காணாமல் போய்விட்டதா? சொற்கள் இருக்கின்றன. ஆனால் அதை யாரும் வாசிக்க தெரியாத நிலையில் உள்ளதா? 
ஆம். அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென் மத்தியப்பகுதியில், பல ஆயிரம் வருட பாரம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசிப் பெண்ணான, மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்து போனார். இவர் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசி பெண். இவரின் மரணத்தோடு உலகில் இருந்த ஒரு மொழி முற்றிலுமாக மறைந்து போனது. இனி அந்த மொழி பேசும் இனக்குழு உலகில் இல்லை. பல்கலைக்கழகங் களின் முயற்சியால் அந்த மொழிச் சொற்கள் சேகரிக்கப் பட்டுள்ளன. ஆனால் அதை பேசத் தெரியாத பூர்வகுடி மனிதர் எவரும் உலகில் இல்லை! 
இவ்வாறு மொழி சார்ந்த பல தெரியாத தகவல் நிறைந்த ஒரு நூல்

 மருத்துவத்துறையில் மார்க்கோ போலோ
 மனித மூளை மற்றும்  நரம்பியல் செயல்பாடுகள் பற்றி உலக அளவில் சிறந்த மருத்துவராகவும் மிக முக்கிய ஆய்வாளராகவும் உள்ளவர் .டாக்டர் வில்லியனூர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன். இவர் பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இன்று அமெரிக்காவில்
"centre for Brain and Congnition" இயக்குனராக உள்ளார். "டைம்" இதழில் நூற்றாண்டு சாதனையாளர். மனித மூளையின் விசித்திரங்களை ஆராய்ந்து புதிய வெளிச்சம் இடுவது இவரது பங்களிப்பு.  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்.
 இதுபோன்று நம்மில் ஒருவராக இருந்து சாதனை புரிந்த மனிதர்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் சிந்தனையில் சிறிது வெளிச்சம் பாய்ச்ச... 
  நம்மில் எல்லோரும் சிறிதளவு தண்ணீரும், உணவும் பறவைகளுக்கு வைத்து சந்தோஷப்பட்டு இருப்போம். ஆனால் மருத்துவம் பார்த்திருப்போமா? ஆம். 
இதோ சிறிது வெளிச்சம் ... 
பறவைகள் மருத்துவமனை
பறவைகளுக்கான மருத்துவமனை டெல்லியின் "சாந்தினி சௌக்"கில் பறவைகள் மருத்துவமனை ஒன்று 1956 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சமண மதத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் இந்த பறவைகள் மருத்துவமனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 50 முதல் 60 வரை அடிபட்ட நோயுற்ற புறா, கிளி, வாத்து ,காகம்...
போன்ற பறவைகள் சிகிச்சைக்காக கொண்டுவரப்படு கின்றன. பறவைகளுக்காக தனித்தனி வார்டுகள் உள்ளன. குடிநீரும் உணவும் தந்து பறவைகளை நேசிக்கும் இந்த மருத்துவமனையின் சேவை மெச்சத்தக்க ஒன்றே.
நூலாசிரியர்  எஸ்.ராமகிருஷ்ணன்
நமது தருமபுரி புத்தகத் திருவிழாவிலும்  பேசியிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான தகவல்.
2019 மே மாதம் வெளிவந்த இந்த நூல் தேசாந்திரி பதிப்பகம் வெளியீடாகும்.
விலை ₹450.

அன்புடன்
ஆய்வியல்நிறைஞர்
மா.செந்தில்குமார்.
3.9.2024



Comments

  1. நன்றி திரு சரவணன் ஐயா நூலகர் அவர்களை இந்த உழைப்பு என்றென்றும் நிலைத்து நிற்கும் தங்களின் பணிக்கு வாழ்த்துக்கள் இவன் மா செந்தில் குமார்9443655688

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Smoke and Ashes - நூல் அறிமுகம்.

உணவு சுற்றுலா - நூல் அறிமுகம்.

கற்பது உலகளவு - நூல் அறிமுகம்.